முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அறன் வலியுறுத்தல் - திருக்குறள்

குறள் : 31 சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. விளக்கம் : அறம், சிறப்பை தரும்! செல்வத்தையும் தரும்! இப்படியிருக்கையில், உயிர்களுக்கு அறத்தைவிட ஆகச்சிறந்த ஒன்று எது? எளிமையாக கூறினால், அறம் என்பது சக மற்றும் பிற உயிர்களுக்கு நன்மை புரிவதுதான்! அறம் செய்ய விரும்பல் வேண்டும்! அறம்புரிந்தால், சிறப்பும் செல்வமும் தாமே வரும் என்பதே வள்ளுவர் வாக்கு. சிறப்பு என ஆரம்பித்து, பின்னர் செல்வம் என சகரத்தில் குறள் மொழிகிறார் வள்ளுவர். அணையா அடுப்பேற்றிய வள்ளலாரின் அறம்தான், இன்று சிறப்புந் தந்து, பலருக்கு உணவுச்செல்வத்தையும் தந்துகொண்டிருக்கிறது. செல்வம் என்பது வெறும் தனம் மட்டுமல்ல! அறஞ்செய்ததும் கிடைக்கும் மனப்பூரணமும் ஒரு செல்வம் தான்! அறம், சிறப்பும் செல்வமும் ஈனும். குறள் : 32 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. விளக்கம் : அறத்தை மேற்கொள்ளுவதைவிட நன்மையானவொன்றும் இல்லை. அறத்தை மறுப்பதைவிட கேடானவொன்றும் இல்லை. அறமே நன்மைபயக்கும். “நல்லோராய் ஆகவென்றால் நியாமதிலே நில் மகனே” என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு. இந்த குறளில், நல்லவர் யார்