கள்ளிக்காட்டு இதிகாசம் - ஏழுமணி நேர வாசிப்பு கல்லூரியில் முதல்வருடம் படிக்கையில், வாசிக்கலாமே என எடுத்துவைத்தது! காலந்தள்ள, இதோ ஓர் ஏழுமணிநேரம்... கருக்கல் நேரத்தில், மிகுந்த ஆவலோடு கள்ளிக்காட்டினுள் புகுந்தேன்... அது வேறு ஓர் உலகம். சீலக்காரியும், வைரவனும் அம்மக்களுக்கு சாமிங்க... கருவாலியும், காடையும் அந்த மண்ணோட பச்சிங்க... கல்தாழையும் கள்ளிமரங்களும் வேலி பாத்துக்கிடுங்க... பஞ்சமும் பட்டினியும் அழையா விருந்தாளிங்க... கோரக்கிழங்கும் கூழ் மறுமாத்தமும் தான் வயித்த கழுவுறதெல்லாம்... கொஞ்சம் விசேசமுனா கோழிச்சோறு... வாழ்க்கைல போரட்டங்க்றது இல்லனா ஆர்வமே மறஞ்சுபோயிருங்க்றேன்... ஆனா, போராட்டம் மட்டுமே வாழ்க்கனா? அப்டி ஒருத்தருதான் இந்த கள்ளிப்பட்டிகாரது... பேயத்தேவரு அவரு பேரு... மண்ணுதான் அவரு உசுரு... "சிலபேர்தான் பிள்ளைகளை பெறுகிறார்கள்; பலபேர் பத்து மாதம் சுமந்து பிரச்சினைகளை பெறுகிறார்கள்" எனுமாறு இருந்தது அவரு பொழப்பு. பெத்தப்புள்ள பேருசொல்லாட்டியும் பேரபுள்ள இருக்கேன்னு தேறியவருதான் பேயத்தேவரு. நாச்சியாவரத்துல அவருக்கு ஒரு சிநேகிதம். அழகம்மா அவருக்கு சரிபாதி. ம...
கல்வி கரையில கற்பவர் நாள்சில...