முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 37 )

361. ஒரு சிறிய தாவர திசுவின் மூலமாக ஒட்டுமொத்த தாவரத்தையே உருவாக்கிவிடலாம். இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
    சர்வ வல்லமை ( Toti-Potency )

362. தாவர கலப்பினால் தரைக்கு கீழ் உருளைக்கிழங்கையும் தரைக்கு மேல் தக்காளியையும் விளைவிக்கும் தாவரம் உருவாக்கப்பட்டது. அதற்கு சூட்டப்பட்ட பெயர் ?
    பொமட்டோ ( Pomato = Potato + Tomato )



363. இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களை மின்சாரக்கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலம், உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி வளர்க்கும் ஜப்பானிய முறை ?
    போன்சாய் ( Bonsai )

364. இந்திய தீபகற்பத்தில் வாழும் மிகப்பெரிய வண்ணமயமான அணில் வகை ?
    மலபார் அணில்




365. ஜெய் ஹிந்த் என்ற வாக்கியத்தை உருவாக்கியவர் ?
    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

366. உடல் பருமனாக உள்ளவர்கள் நளினமாகவும் நளினமாக உள்ளவர்கள் பருமனாகவும் மாற உண்ணவேண்டிய கனி ?
    கொய்யா

367. ஒருவருக்கு கொட்டாவி வந்தால் அருகாமையில் உள்ளவருக்கும் கொட்டாவி வருவதற்கான காரணம் ?
    சலிப்பான சூழல் மற்றும் அலுப்பான சூழலில் அமர்ந்திருக்கும்போது, ஒருவர் கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்டவருக்கும் மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கிறது.

368. அதிக வெப்பநிலையில் கூட உயிரோடிருக்கும் பாக்டீரியா ?
    ஆர்க்கி பாக்டீரியா

369. நீண்ட மூக்கு கொண்ட குரங்கு ?
    புரோபோசிஸ் குரங்கு ( Proboscis Monky )




370. மருதாணி வைக்கும் போது எப்படி செந்நிறம் ஏற்படுகிறது ?
    மருதாணி இலைகளில் லாசோன்கள் ( Lawsones ) எனப்படும் சாய மூலக்கூறுகள் உள்ளன. இவை மனித உடலில் உள்ள கெராட்டின் என்ற புரதத்தோடு வலுவாக ஒட்டுவதனால் நீண்ட நாள் நிறம் மங்காமல் உள்ளன.



 

கருத்துகள்