முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (39)

பொது அறிவு (39)

 

381. மூளையை கண்ணோடு இணைக்கும் நரம்பு ?
    பார்வை நரம்பு ( Optic Nerve )

382. கண்ணின் நிறமுள்ள பகுதி எப்படி அழைக்கப்படுகின்றது ?
    கிருஷ்ண படலம் - ஐரிஸ் ( Iris )

383. கண்ணின் மத்தியிலுள்ள அடர்த்தியான நிறமுடைய பகுதி எப்படி அழைக்கப்படுகின்றது ?
    கண்ணின் கருமணி - பியூப்பில் ( Pupil )

384. கண்ணின் வெண்மையான பகுதி எப்படி அழைக்கப்படுகின்றது ?
    வெண்படலம் - ஸ்கிளீரா ( Sclera )

385. மனித உடலில் வளரவே வளராத உறுப்பு ?
    கண்
[ பிறப்பின் போது உள்ளவாறே கண் அளவு எப்போதும் அமையும் ]

386. மனித உடலிலேயே தொடு உணர்ச்சி மிகுந்த பகுதி ?
    நுனி நாக்கு (Tip Of The Tongue )

387. மனித நாக்கின் பொதுவான நிறம் ?
    இளஞ்சிவப்பு ( Pink )

388. நாக்கின் நிறத்தைக் கொண்டு உடல் கோளாறுகளை தீர்மாணிப்பது எங்கனம் ?
    சிவப்பு - வைட்டமின் பாதிப்பு
    வெள்ளை - வாயில் நோய்த்தொற்று
    நுனியில் சிவப்பு - மன அழுத்தம்

389. அசையாத நாக்கு உடைய உயிரினம் ?
    முதலை

390. நாக்கினால் மூக்கை தொடுவது மருத்துவத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
    கார்லினின் குறியீடு ( Gorlin's Sign )
[ Gorlin Tongue Sign is a weird body movement where one can touch their tongue to their nose. ]

கருத்துகள்