முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 40 )

பொது அறிவு ( 40 )


391. மனித உடலில் இரண்டு எலும்புகள் ஒன்று சேரும் இடம் ( எ.கா : மூட்டு ) எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
    இணைப்பு - Articulation

392. இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடத்திற்கு நடுவே உள்ள திரவம் ( Fluid ) ?
    இணைப்புத் திரவம் - சைனோவியல் திரவம்
[ Synovial fluid, also known as joint fluid, is a thick liquid located between your joints. ]

393. இணைப்புத் திரவம் ( சைனோவியல் ) இல்லாமல் போனால் என்ன ஆகும் ?
    இரண்டு எலும்புகளும் ஒன்றோடொன்று உரசி கடும் வலியும் எலும்பு தேய்மானமும் ஏற்படும்.

394. இணைப்புத் திரவத்தை உருவாக்கும் உணவு வகைகள் ?
    கீரைகள் , காய்கறிகள் , பழங்கள்

395. மனித உடலில் எத்தனை இணைப்பு பகுதிகள் ( Articulations ) உள்ளன ?
    250 முதல் 350

396. மனித உடல் நிறத்திற்கு காரணம் ?
    மெலனின் எனும் நிறமி ( Melanin Pigment )

397. மெலனின் அளவு அதிகரித்தவரின் தோல் என்ன நிறம் கொண்டிருக்கும் ?
    கருப்பு நிறம்
[ If your body makes too much melanin, your skin gets darker. ]

398. தோலுக்கு நிறம் தருவதை தவிர மெலனின் நிறமியின் பணிகள் யாவை ?
    சூரிய ஒளியிடமிருந்து தோலைக் காக்கும் - மோசமான கதிரியக்க கதிர்களிடமிருந்து தோலைக் காக்கும் - முடி மற்றும் கண்ணின் நிறத்திற்கும் இதுவே காரணமாகிறது.

399. மெலனினை உருவாக்கும் செல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
    மெலனோசைட் ( Melanocyte )

400. மெலனின் நிறமி செல்கள் இறந்து போனால் என்ன ஆகும் ?
    தோலின் நிறம் மாறும். இதற்கு விட்டிலிகோ ( Vitiligo ) என பெயர்.

[ Vitiligo occurs when pigment-producing cells die or stop functioning. ]
 

கருத்துகள்