முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 41 )

பொது அறிவு ( 41 )

 


401. விமானி இல்லாமல் ரோபோட்டினால் இயக்கப்படும் விமானம் உள்ளதா ?
    ஆம் ! லைமா என்ற விமானம் அவ்வாறு இயங்குமாறு வாஷிங்டன் பல்கலைக் கழகத்தினால் கட்டப்பட்டது.

402. முப்பது நாட்கள் உணவின்றி வாழ முடிந்த மனிதனால் மூன்று நாட்கள் கூட நீரில்லாமல் வாழமுடியவில்லையே... ஏன் ?
    நீர் மனித உடலிலிருந்து தோள் , மூச்சு , சிறுநீரகம் வாயிலாக இழக்கப்படுவது இதற்கு முக்கிய காரணம். இந்த இழப்பை ஈடு செய்தே ஆகவேண்டும்.

403. மின்மினி பூச்சி ஒளிர காரணம் ?
    மின்மினி பூச்சியின் உடலிலுள்ள லூசிபெரின் என்ற வேதிபொருள் ஆக்சிசனோடு சேரும்போது ஒளியை உமிழ்கிறது.

404. குறிப்பிட்ட தூரத்தை ஓடி கடக்கும்போது களைத்து விடுகிறோம். ஆனால் அதே தூரத்தை நடந்து கடந்தால் களைப்பு தோன்றுவதில்லையே... ஏன் ?
    சக்தி இழப்பும் சக்தி சேமிப்பும் உடலில் நிகழும் வினைகள். ஓடும் போது சக்தி இழப்புதான் அதிகம். நடக்கும் போது குறைந்த அளவில் சக்தி இழக்கப்படுகிறது. அதிகளவு சக்தி சேமிக்கப்படுகிறது.

405. கோலா ( Coca Cola ) பானம் நல்லதா ?
    கோலா பாஸ்பரிக் அமிலத்தை கொண்டுள்ளது. இது அரிக்கும் தன்மையுடைது. பிடுங்கப்பட்ட பல்லை கோலா பானத்தில் போட்டால் ஒரு மணி நேரத்தில் கரைந்துவிடுகிறதாம். கோலா பானம் தவிர்க்கப்படவேண்டியது.

406. சில நேரங்களில் நீரையோ அல்லது சில பானங்களையோ அருந்திய உடன் அதிகமாக வியர்க்க காரணம் ?
    நீர் அல்லது பானத்தை உட்கொள்கையில் இரத்த அழுத்தம் அதிகமாகிறது. உணவை உட்கொள்ளும் போதும் இதே நிகழ்வுதான் நிகழ்கிறது. ஆனால் உணவைக் காட்டிலும் திரவங்கள் அதிக அழுத்தம் தந்து வியர்வை நீரை அதிகம் வெளியேற்ற செய்கின்றன.

407. மனித உடலில் மிகப்பெரிய உள் உறுப்பு ?
    கல்லீரல் ( Liver )

408. மனித உடலில் வலியுணரா பகுதி ?
    மூளை ! இதனால் தான் மூளை அறுவைசிகிச்சை சில நேரங்களில் நோயாளி விழிப்புடன் இருக்கும்போதே செய்யப்படுகிறது.

409. மனித உடலிலேயே அதிக உணர்வு மிகுந்த பகுதி ?
    விரல் நுனி
[ The fingertips are the most sensitive parts ]

410. செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர்கள் வாழ்ந்த அதிகபட்ச வருடங்கள் ?
    ஐந்து
[ The record for the longest time living with an artificial heart is five years. ]

கருத்துகள்