முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 43 )

பொது அறிவு ( 43 )


421. மெழுகுவர்த்தியை எரிக்கும் போது வெளிப்படும் வேதிப்பொருள் ?
    ஃபார்மால்டிஹைடு ( Formaldehyde )

 

422. ஃபார்மால்டிஹைடு விளைவிக்கும் நோய் ?
    புற்றுநோய்
[ Burning candles can release volatile organic compounds like formaldehyde that may increase your cancer risk as well as lung problems. ]

 

423. மெழுகுவர்த்தி எதனால் செய்யப்படுகிறது ?
    பாராஃபீன் எனப்படும் பெட்ரோலிய உப பொருள்
[ Most candles are made from paraffin, a petroleum byproduct. ]

 

424. மெழுகுவர்த்திகளுக்கு தடை விதித்த நாடு ?
    கனடா - எளிதில் தீப்பற்றி அபாயகரமான விளைவுகள் ஏற்பட்டுவிடகூடாதென
[ Candles which can spontaneously relight are prohibited in Canada under the Canada Consumer Product Safety Act as they can re-ignite after disposal which can potentially lead to fires. ]

 

425. மெழுகுவர்த்தியை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் ?
    சீனர்கள்
[ The earliest surviving candles originated in China. ]

 

426. அதிக அலைநீளம் உடைய நிறம் ?
    சிவப்பு
( குறைந்த அலைநீளம் கொண்ட நிறம் ஊதா )
[ Violet has the shortest wavelength, at around 380 nanometers, and red has the longest wavelength, at around 700 nanometers. ]

 

427 . அலைநீளம் அதிகமானால் எந்த காரணி குறையும் ?
    அதிர்வெண் அல்லது ஆற்றல்
[ The frequency of a wave is inversely proportional to its wavelength. That means that waves with a high frequency have a short wavelength, while waves with a low frequency have a longer wavelength. ]

 

428 . எந்த அளவு அலைநீளம் கொண்ட நிறத்தை மனித கண்களால் காணமுடியும் ? 👀
    380 முதல் 700 நானோ மீட்டர்கள்
[ The human eye can detect wavelengths from 380 to 700 nanometers. ]

 

429 . ஊதா நிறத்தை மனித கண்களால் காணமுடிகிறது. புற ஊதா நிறத்தை ஏன் காணமுடியவில்லை ? 👀
    ஊதா நிறத்தின் அலைநீளம், மனித கண்களுக்கு புலப்படும் 380 முதல் 700 நானோ மீட்டர்கள் வரையிலான அளவில் உள்ளது. புறா ஊதா நிறம், 380 நானோ மீட்டருக்கு கீழான அலைநீளம் கொண்டுள்ளதால் மனித கண்களால் காணமுடியவில்லை.
[ Violet is at one end of the spectrum of visible light, between blue light, which has a longer wavelength, and ultraviolet light, which has a shorter wavelength and is not visible to humans. ]

 

430 . கண்களை நன்கு மூடியிருக்கும் போது பல நிறங்கள் கரு நிறத்தில் மிதப்பது போன்ற காட்சியை காண்கிறோம். இது அறிவியலில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
    ஃபாஸ்ஃபீன்
[ Phosphenes are the luminous floating stars, zigzags, swirls, spirals, squiggles, and other shapes that you see when closing your eyes tight and pressing them with your fingers ]


கருத்துகள்