முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (44)

பொது அறிவு (44)

 

431. கடல்நீர் உவர்ப்பு சுவையோடு இருக்க காரணம் என்ன ?
    கடலோரத்தில் உள்ள தாதுக்கள் நிறைந்த பாறைகளில் குறைந்த அமிலத்தன்மையுள்ள மழை பொழியும் போது பாறைகளின் உவர்ப்பு தாதுக்கள் கரைந்து கடலில் கலப்பதால்...
[ Salt in the sea, or ocean salinity, is mainly caused by rain washing mineral ions from the land into water. ]

432 . கடற்கரைகளில் அதிக தென்னை மரங்கள் வளர காரணம் ?
    தென்னை மரங்கள் உவர்ப்புத்தன்மையுடைய மண்ணில் வளரும் தன்மையுடையவை.
[ Coconut trees prefer saline conditions which it easily get near the coastal areas. ]

433 . கடற்கரையில் அலைகள் உருவாக காரணம் ?
    காற்றுக்கும் கடல் நீருக்குமான உராய்வு கடல்நீரை தொடர் சுழல் இயக்கத்தில் வைத்திருப்பதால் அலைகள் உருவாகின்றன.
[ As wind blows across the surface of the ocean or a lake, the continual disturbance creates a wave crest. ]

434 . இரவு நேரங்களில் அலைகள் அதிகமாக இருக்க காரணம் ?
    நிலவிற்கு ஈர்ப்புவிசை உண்டு. நிலவு கடல் நீரை தன்னை நோக்கி ஈர்க்கும். ஆனால் பூமியின் ஈர்ப்புவிசை நிலவினதை காட்டிலும் அதிகம். எனவே குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் நிலவால் ஈர்க்கமுடிவதில்லை. இந்த நீர்த்திரள்கள் பூமியை நோக்கி விழுந்து பேரலைகளாக உருவாகின்றன.
[ When the gravity of moon attracts the sea water towards it starts rising up, but the gravity of moon is not this much strong that it can attract the water completely towards its side so the water rises up in the form of waves but due to the height strength of gravitational pull of earth it does not reaches the moon and becomes so gigantic waves. ]

435 . அலைகளின் முக்கியத்துவம் என்ன ?
    காலநிலையை கடல் அலைகளின் அசைவுகளால் தீர்மானிப்பதனால் புயல் போன்ற பேரிடர்களை முன்கூட்டியே எதிர்கொள்ளலாம்‌.
[ Ocean waves are very important for weather forecasting ]


436 . ஒரு நாளில் 20 மணி நேரம் வரை உறங்கும் விலங்கு எது ?
    தேவாங்கு
[ Sloths sleep upto 20 hours. ]

437 . சோம்பேறி விலங்குகள் என அழைக்கப்படுவது ?
    தேவாங்கு
[ Sloths are arguably the laziest animals in the animal kingdom. ]


438 . மிக நீண்ட நாள் மரணமில்லாத உயிரினம் எது ?
    மரணமில்லா நுங்குமீன்/இழுது மீன்
[ Scientists have discovered immortal jellyfish which can live forever. ]

439 . சிலந்தி வலை எதனால் ஆனது ?
    சிலந்தியின் உடலில் இயற்கையாகவே உள்ள புரதம்
[ Spiders make their webs from silk, a natural fibre made of protein. ]

440 . அதிக நாட்கள் வாழும் மக்கள் யாவர் ?
    ஜப்பானியர்கள்
[ Japanese people are able to live 75 of their years completely healthy and without disabilities, according to the WHO. ]

கருத்துகள்