முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 47 )

பொது அறிவு ( 47 )

461 . தாவர செல்லின் செல்சுவர் எதனால் ஆனது ?
    செல்லுலோஸ்
[ Plant cell walls are primarily made of cellulose. ]

462 . தாவரங்களை கால்நடைகள் எப்படி எளிதில் செரிக்கின்றன ?
    பசு போன்ற கால்நடைகளின் செரிமான மண்டலத்தில் செல்லுலோசை செரிக்கும் நொதிகளும் பாக்டீரியாக்களும் உள்ளன. 🐄
[ Animals such as cows have anaerobic bacteria in their digestive tracts which digest cellulose. ]

463 . மனிதனால் ஏன் பசும் தாவரங்களை உண்டு செரிக்க இயலவில்லை ?
    மனித உடலில் செல்லுலோசை செரிக்கும் நொதிகளோ பாக்டீரியாக்களோ கிடையாது.
[ Humans lack the enzyme necessary to digest cellulose. ]

464 . விலங்கு செல்களில் செல்சுவர் உண்டா ?
    இல்லை
[ Cell wall is present in plants, but absent in animals. ]

465 . மனிதனுக்கு செல்லுலோசால் கிடைக்கும் பயன் யாது ?
    காகிதம்,நெகிழி போன்றவற்றின் தயாரிப்பில் செல்லுலோஸ் பயன்படுகிறது.
[ According to how it is treated, cellulose can be used to make paper‌ and plastics, in addition to having many other industrial uses. ]

466 . பனையின் பதநீரின் பயன்கள் ?
    சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், இதில் உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.

467 . நுங்கு உண்பதால் கிடைக்கும் பயன்கள் ?
    உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது.

468 . பனங்கிழங்கு உண்பதால் கிடைக்கும் பயன்கள் ?
    நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த கிழங்கை சாப்பிட்டால் நல்ல உடல் பலம் கிடைத்துவிடுகின்றது. உடல் இளைத்தவர்கள் கூட பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான உடல் பருமன் பெற்று பொலிவுடன் திகழ்வார்கள்.

469 . சங்ககாலம் தொட்டு இலக்கிய இலக்கணங்கள் எவ்வாறு இயம்பப்பட்டன ?
    பனையின் ஓலைச்சுவடிகள் மூலமாக

470 . பனை கருப்பட்டியின் பயன்கள் ?
    சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம். ஏனெனில் உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அதிக கலோகரிகள் இன்றி உடல் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது. கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அதுபோல் பொட்டாசியம் சத்து மூலம் நரம்பு மண்டலமும் ஆரோக்கியம் பெறுகிறது.
 

கருத்துகள்