முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 48 )

பொது அறிவு ( 48 )

 

471 . சிலரால் குறிப்பிட்ட நிறங்களை பார்க்க இயலாது. இந்த குறைபாடு மருத்துவத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
    நிற பார்வை குறைபாடு
[ Colour Vision Deficiency is the inability to distinguish between different Colours ]

472 . சிவப்பு நிறத்தை பார்க்க முடியாத குறைபாட்டை எவ்வாறு வகைப்படுத்தலாம் ?
    முழுவதுமாக சிவப்பு நிறத்தை காண முடியாத குறைபாடு.
     ஓரளவு மட்டுமே சிவப்பு நிறத்தை காண முடிந்த குறைபாடு.
[ Protanopia ( Red Blind )
  Protanomaly  ( Red weak ) ]

473 . பச்சை நிறத்தை பார்க்க முடியாத குறைபாட்டை எவ்வாறு வகைப்படுத்தலாம் ?
    முழுவதுமாக பச்சை நிறத்தை காண முடியாத குறைபாடு.
     ஓரளவு மட்டுமே பச்சை நிறத்தை காண முடிந்த குறைபாடு.
[  Deuteranopia ( Green Blind)        Deuteranomaly  ( Green weak ) ]

474 . முற்றிலும் நிற பார்வை குறைபாடு உடையவர்களின் கண் பார்வை எத்தகையது ?
    முழு நிற பார்வை குறைபாடு உடையவர்களின் கண்களுக்கு அனைத்தும் கருப்பு - வெள்ளை நிறங்களில் மட்டுமே தெரியும்.
[ Those who have achromatopsia or complete colour blindness only see the world in shades of grey, black and white. ]

475 . முகநூலின் ( Facebook ) நிறம் நீலமாக இருப்பதன் காரணம் என்ன ?
    முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் நிற பார்வை குறைபாடு உடையவர். அவரால் நீல நிறத்தையே அதிகமாக காண முடியும். எனவே முகநூலை நீல நிறம் அலங்கரிக்கிறது.
[ It's because Mark Zuckerberg the co-founder and CEO of the social-networking website Facebook is red-green colorblind. This means that blue is the color Mark can see the best. That also happens to be the color that dominates the Facebook website and mobile app. ]


476 . விலங்குகளின் வாலால் அவற்றிற்கு கிடைக்கும் பயன்கள் ?
    பூச்சிகளை விரட்டவும் ( பசு ) சமநிலைபடுத்தவும் ( பூனை , பறவை ) மரக்கிளைகளை பற்றவும் ( குரங்கு ) வால் பயன்படுகிறது.
[ Many land animals use their tails to brush away insects. Some species like cats use their tails for Balance; and some, such as monkeys are adapted to allow them to grasp tree branches. ]

477 . கருவறையில் இருக்கும் குழந்தைக்கு வால் இருக்குமா ?
    ஆம். ஆனால் தோன்றிய எட்டு வாரங்களில் அது மறைந்துவிடும்.
[ Humans grow a tail in the womb, which disappears by eight weeks. ]

478 . சிங்கவால் குரங்குகள் எங்கு மட்டும் காணப்படுகின்றன ?
      மேற்கு தொடர்ச்சி மலைகள் - தென்னிந்தியா
[ The lion-tailed macaque is an Old World monkey endemic to the Western Ghats of South India. ]

479 . தனது வாலை மீண்டும் மீட்டு வளர்க்க பல்லிக்கு எத்தனை நாட்கள் ஆகும் ?
    60 நாட்கள்
[ It takes lizards more than 60 days to regenerate a functional tail. ]

480 . பிற விலங்குகளின் தாக்குதல்களிலிருந்து தப்ப பல்லி தன் வாலை தானே உடலிலிருந்து பிரித்து விட்டுவிடும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
    தன் உறுப்பை தானே இழத்தல் ( Autotomy )
[ Autotomy is the act of casting off of a part of the body (e.g. the tail of a lizard) by an animal under threat. ]

 

கருத்துகள்