முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 49 )

பொது அறிவு ( 49 )

 

481 . தாகம் எப்போதெல்லாம் ஏற்படும் ?
    உடலில் நீர் அளவு குறையும் போதும் சில உப்பு தாதுக்கள் அதிகரிக்கும் போதும் தாகம் ஏற்படும்.
[ It arises from a lack of fluids or an increase in the concentration of certain osmolites, such as sodium. ]

482 . உடலில் போதுமான அளவு நீரளவு இல்லாத நிலை எவ்வாறு அறியப்படுகிறது ?
    நீர் வற்றி போதல் ( Dehydration )
[ Dehydration happens when your body doesn't have as much water as it needs. ]

483 . மனித உடலுக்கு ஒரு நாளுக்கு எந்த அளவு நீர் தேவை ?
      3 லிட்டர் ( ஆண்கள் )
      2 லிட்டர் ( பெண்கள் )
[ For men - About 3 liters
  For women - A little over 2 liters
Pregnant women should drink about 10 cups of water daily. Those who Breastfeed need about 12 cups. ]

484 . நீர் ஏன் பொதுக்கரைப்பான் ( Universal Solvent ) என அழைக்கப்படுகிறது ?
    மற்ற நீர்மங்களை காட்டிலும் நீர் அநேக கரைபொருட்களை கரைக்கும் தன்மையகத்தது.
[ Water is called the "Universal solvent" because it dissolves more substances than any other liquid. ]

485 . நீர் ஏன் பொதுவான குளிர்விப்பானாக ( Coolent ) பயன்படுத்தபடுகிறது ?
    நீரின் தன்வெப்பநிலை ( Specific Heat ) அதிகம். எனவே , குறுகிய காலத்தில் குளிர்விக்கவும் முடியாது. வெப்பமாக்கவும் முடியாது‌. இதனால் , பருப்பொருளொன்றை குளிர்விக்கும் பண்பை பெறுகிறது.
[ Water is known to have a higher specific heat capacity this makes it an ideal coolant. This is because coolant is used to regulate heat in a device and in order to regulate heat, the coolant must be able to tolerate high levels of heat, so this is done by water due to its high specific heat. ]
 

486 . மனித நுரையீரலை சுற்றியுள்ள உறை ?
    பிளியூரா
[ Pleura is a thin layer of tissue that covers the lungs and lines the interior wall of the chest cavity. It protects and cushions the lungs. ]

487 . மனித இதயத்தை சுற்றியுள்ள உறை ? 
    பெரிகார்டியம்
[ Pericardium is a thin layer of tissue that covers the heart. It protects and cushions the heart. ]

488 . இரண்டு நுரையீரல்களுக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ? 
      மீடியாஸ்டீனம் - இங்குதான் இதயம் உள்ளது.
[ The mediastinum is the area in the chest between the lungs. ]

489 . இதயத்தை சூழ்ந்துள்ள பெரிகார்டியம் உறை எத்தனை அடுக்குகளை உடையது ? 
    இரண்டு ( இதயம் முக்கியமல்லவா ! )
[ The pericardium consists of two layers. ]

490 . இதய பகுதிகள் எவ்வாறு அறியப்படுகின்றன ? 
      நடுப்பகுதி - மையோகார்டியம்
     ‌ வெளிப்பகுதி - எபிகார்டியம்
       உட்பகுதி - எண்டோகார்டியம்
[ The outer layer of the heart wall is the epicardium, the middle layer is the myocardium, and the inner layer is the endocardium. ]

 

கருத்துகள்