முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 50 )

 பொது அறிவு ( 50 )

  

491 . உலகின் மிகப்பெரிய ராணுவம் எந்த நாட்டினது ?
    சீனா
[ இந்தியா உலகிலேயே நான்காவது பெரிய இராணுவத்தை உடையது. ]

492 . சீன இராணுவத்தின் பெயர் ?
    மக்கள் விடுதலை இராணுவம் ( People's Liberation Army )

493 . உலகின் மிகப்பெரிய கம்யூனிச நாடு ?
      சீனா
[ கம்யூனிசம் என்பது அனைத்துத் தொழிலகங்கள், வேளாண் பண்ணைகள், வணிகச் சேவைகள் முதலியவற்றை அரசுடைமையாக அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அனைவரையும் சமமாக நடத்தும் குறிக்கோள் உடைய அரசியல் முறை அல்லது பொதுவுடைமை முறை. ]

494 . உலகின் மிகப்பெரிய சுவர் ?
    சீனப் பெருஞ்சுவர்

495 . உலகிலேயே அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட நாடு ?
      சீனா
 

496 . சில நேரங்களில் உதடு வறண்டு போக காரணம் ?
      குளிர்காலங்களில் காற்றிலுள்ள ஈரப்பதம் , மிகையான சூரிய ஒளி , உதடு கடிக்கும் பழக்கம் மற்றும் நாக்கினால் உதட்டை ஈரப்படுத்தும் செயல்கள் உதடு வறள காரணமாகின்றன.
[ Little humidity in the air during the winter months is known to cause chapped lips. Frequent sun exposure in the summer can also worsen your condition. Another common cause of chapped lips is habitual licking. Saliva from the tongue can further strip the lips of moisture, causing more dryness. ]

497 . காலை எழுந்தவுடனோ அல்லது பகல் பொழுதுகளிலோ முகத்தில் எண்ணெய் தன்மை தோன்ற காரணம் ?
    சில நேரங்களில் நம் தோல் நீர் அல்லது திரவத்தன்மையை இழந்துவிடும். ( தோல் வறட்சி ) தோலை திரவ பதத்தில் தக்க வைக்க உடலில் இயற்கையாகவே சீபம் எனப்படும் பொருள் சுரக்கப்படுகிறது. இந்த நேரங்களில் நீர் அருந்துவது நல்லது.
[ Oily skin happens when the sebaceous glands in the skin make too much sebum. Sebum is the waxy, oily substance that protects and hydrates the skin. ]

498 . கண்புருவத்திலுள்ள முடிகள் உதிர காரணம் ?
      இயல்பான ஒரு நிகழ்வு தான். அதிகப்படியான எதிர்ப்புசக்தி உடலில் உருவாகும் போதும் கண்புருவ முடிகள் உதிர்கின்றன.
[ Actually, eyebrow hair loss is a fairly common occurrence. It can be due to overactive immune system ]

499 . கண் புருவ முடிகளை சவரம் செய்யும் பழக்கம் உடையவர்கள் ?
    பண்டைய எகிப்தியர்கள். தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளாகிய பூனைகள் இறந்துபோனால் தங்கள் புருவ முடிகளை சவரம் செய்து அவை மீண்டும் வளரும் வரை துக்கம் அனுசரிப்பார்கள்.
[ Ancient Egyptians shaved off their eyebrows as a sign of mourning when their cats died, and continued to mourn until their eyebrows grew back. ]

500 . சிலர் சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழுவதுண்டு. ஏன் ?
    சிலர் சிரிக்கும்போது அவர்களது முகத்திலுள்ள சைக்கோமாட்டிகஸ் பெருந்தசை இடம் நகர்வதால் குழி போன்ற அமைப்பு ஏற்படுகிறது.
[ Dimples are caused by a change in a facial muscle called the zygomaticus major. ]
 

கருத்துகள்