முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 61 )

பொது அறிவு ( 61 )


601 . கடல் நீரை பருகினால் என்ன ஆகும் ?
    உடலில் உள்ள திசுக்களில் நன்னீர் உண்டு. நாம் உண்ணும் உணவிலுள்ள உப்புக்களை நீர்த்துவிடும் தன்மை இந்த நன்னீருக்கு உண்டு. அதிகபடியான உப்பு உடலில் சேரும்போது அதை நீர்த்துவிடச்செய்யும் அளவிற்கு உடலில் நன்னீர் இல்லாத காரணத்தால் கடும் முடிவுகள் ஏற்படும்.
[ Seawater is toxic to humans because your body is unable to get rid of the salt that comes from seawater. Tissue in your body also contains freshwater that can be used. But if there is too much salt in your body, your kidneys cannot get enough freshwater to dilute the salt and your body will fail. ]

602 . கடல்நீர் சருமத்திற்கு நல்லதா  ?
    கடல்நீர் எண்ணற்ற தாதுக்களை உடையது. அவை சருமத்திற்கு நன்மை பயக்கும் இயல்புடையவை.
[ Ocean water differs from river water in that it has significantly higher amounts of minerals, including sodium, chloride, sulphate, magnesium and calcium. This is why it's highly useful for skin. ]

603 . கடல்நீரில் குளிப்பதால் ஏற்படும் பயன்கள் ?
    பல உபாதைகளால் ஏற்படும் வலியை கடல்நீர் தவிர்க்கவல்லது. கடல்நீர் தன்னகத்தே கொண்டுள்ள தாதுக்கள் இதற்கு காரணமாகின்றன. நல்ல தூக்கத்தையும் கடல்நீர் குளியல் தரும்‌. 
[ The effects of swimming in warm seawater can help fend off many conditions such as asthma, inflammatory disease, bronchitis and arthritis as well as general aches and pains. Due to its rich levels of magnesium, seawater can help decrease stress, relax the muscles and promote more restful sleep. ]

604 . மிகவும் தெளிவாக காணப்படும் கடல் எது ?
    தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி 

605 . நீலநிறத்தில் காணப்படும் கடல் ?
      மாலத்தீவு கடல் பகுதி 

606 . இந்தியாவின் ஷேக்ஸ்பியர் ?
    காளிதாசர்

607 . தமிழகத்தின் மாநில பழம்  ?
    பலா

608 . தமிழகத்தின் மாநில மரம் ?
    பனை

609 . தமிழகத்தின் மாநில பூச்சி ?
    தமிழ் மறவன் பட்டாம்பூச்சி 

610 .தமிழகத்தின் மாநில விளையாட்டு ?
      கபடி  

கருத்துகள்