முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 67 )

பொது அறிவு ( 67 )


 

661 . pH மதிப்பு எந்த எல்கைக்குள் அமையும் ?
    0 முதல் 14 வரை

662 . pH மதிப்பு 0 என்றால் கரைசல் எத்தன்மையகத்தது ?
    வலுவான அமிலத்தன்மை ( Strongly Acidic )

663 . pH மதிப்பு 14 என்றால் கரைசல் எத்தன்மையகத்தது ?
    வலுவான காரத்தன்மை ( Strongly Basic or Alkaline )

664 . இரத்தம் எந்த தன்மையுடையது ?
    காரத்தன்மையுடையது ( pH  : 7.35 To 7.45 )

665 . Coca Cola பானம் எந்த தன்மையுடையது ?
    அமிலத்தன்மையுடையது  ( pH : 2.3 )  [ ⚠️ இது உள்ளுறுப்புகளை உருக்குலைக்கும் அளவிற்கு அபாயகரமானது ]

666 . pH தாள் எந்த பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது ?
    லைக்கன்கள் எனப்படும் பூஞ்சைகள் ( The Fungi Of Lichens )

667 . ஃபினாப்தலீனை வைத்து அமிலத்தன்மையை சோதிப்பது எங்கனம் ?
    ஃபினாப்தலீனை கரைசலோடு சேர்க்கும்போது நிறத்தை இழந்தால் கரைசல் அமிலத்தன்மையுடையது. ( Turns colorless in acidic solutions  )

668 . ஃபினாப்தலீனை  வைத்து காரத்தன்மையை சோதிப்பது எங்கனம் ?
    ஃபினாப்தலீனை கரைசலோடு சேர்க்கும்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்றினால் கரைசல் காரத்தன்மையுடையது. ( Turns Pink in Basic solutions  )

669 . மஞ்சள் பொடியை வைத்து அமிலத்தன்மையை சோதிப்பது எங்கனம் ?
    மஞ்சள் பொடியை கரைசலோடு சேர்க்கும்போது மஞ்சள் நிறம் தோன்றினால் கரைசல் அமிலத்தன்மையுடையது அல்லது நடுநிலைத் தன்மை உடையது. ( Turns Yellow in Acidic Solutions / Neutral Solutions )

670 . மஞ்சள் பொடியை வைத்து காரத்தன்மையை சோதிப்பது எங்கனம் ?
    மஞ்சள் பொடியை கரைசலோடு சேர்க்கும்போது அடர் சிவப்பு நிறம் தோன்றினால் கரைசல் காரத்தன்மையுடையது. ( Turns Bright Red in Basic solutions  ) 

கருத்துகள்