முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 80 )

பொது அறிவு ( 80 )               


791 . உலக புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்தை வரைந்தவர் ?
    லியானர்டோ டா வின்சி

792 . தற்போது மோனாலிசா ஓவியம் எந்த நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது ?
    லூவர் அருங்காட்சியகம் , பிரான்சு

793 . ஆய்வுகளுக்கு எலிகளை அதிகமாக பயன்படுத்த காரணம் ?
    எலிகள் வேகமாக இனவிருத்தி செய்பவை. 

794 . மொத்த உடற்பரப்பால் சுவை அறியும் மீன் ?
    தேளி ( Cat Fish )

795 . 300 பற்களையும் 32 மூளைகளையும் உடைய உயிரினம் ?
    அட்டைப்பூச்சி


796 . தாமிரபரணி ஆற்றின் பெயர்க்காரணம் ?
    தாமிரவருணி ( செம்பு உலோகத்தின் நிறம் உடைய ஆறு )
                              ( அல்லது )
  தாமிரம் வரும் நீர் ( செம்பு உலோகம் கிடைக்கும் ஆறு )

797 . "உலகத்திலேயே மிக அருமையானதும், தூய்மையானதுமான நீராடுதுறை குற்றாலமே என்று துணிந்து கூறுதல் சற்றும் மிகையாகாது" என்றவர்  ?
    கால்டுவெல்

798 . திரு என்ற அடைமொழி பெற்ற நட்சத்திரங்கள் ?
    திருவாதிரை & திருவோணம் 

799 . ஆதிரை திருநாளின் சிறப்பைக் குறித்து பாடும் தமிழ் இலக்கியம் ?
    பரிபாடல்

800 . தாமிரபரணி எங்கு தோன்றி‌ எங்கு கடலில் கலக்கிறது ?
    பாபநாசத்தில் ( திருநெல்வேலி ) தோன்றி புன்னக்காயல் ( தூத்துக்குடி ) அருகே கடலில் கலக்கிறது.

கருத்துகள்