முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 82 )

பொது அறிவு ( 82 )

  

811 . தேன் ஏன் கெட்டுப்போவதில்லை  ?
    உணவு கெட்டுப்போக காரணம் பாக்டீரியாக்களே ! தேன் அதிக அமிலத்தன்மையும் குறைந்த நீர்ச்சத்தும் உடையதால் பாக்டீரியாக்களால் தேனில் செயல்பட முடியாது‌. எனவே தேன் எந்நாளும் கெடுவதில்லை.
[ The honey's low water content and high acidity are the two main reasons it doesn't spoil – the bacteria that cause food to go off can't thrive in these conditions.]

 

812 .  தேன் கூடு எதனால் ஆனது  ?
    தேன் மெழுகு : இது வேலைக்கார தேனீக்களால்‌ உண்டாக்கப்படுகிறது.
[ Honeycombs are made from beeswax, a substance created by worker bees. ] 

 

813 . தேன் தட்டிலுள்ள சிறு அறைகள் ஏன் அறுங்கோண வடிவில் உள்ளன  ?
    தேனீக்கள் தேன் மெழுகை‌ கொண்டு‌ வட்ட வடிவ துளைகளை ஏற்படுத்துகின்றன. எனினும் தேனீக்களின் உடல் வெப்பம் , வட்ட வடிவ துளையை‌ சற்றே உருக்குலையச் செய்து அறுங்கோணமாக்குகிறது.
[ As they are making circles, their body heat melts the wax which slowly slips along the network between circles as it changes into hexagon shape. ] 

 

814 . தேனீக்களின் கொடுக்குகளில் உள்ள அமிலம் என்ன ?
    ஃபார்மிக் ‌அமிலம்
[ The acid present in honey bee sting is formic acid ]

 

815 . கலப்படமில்லாத தூய தேனை எவ்வாறு கண்டறிவது ?
    கண்ணாடி குவளையில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் அது அசல் தேன். சுத்தமான அசல் தேன் எவ்வளவு நாள் இருந்தாலும் அதில் எறும்பு மொய்க்காது.

 

816 . கணிதத்தின் தந்தை  ?
    ஆர்க்கிமிடீஸ்

 

817 .  வேதியியலின் தந்தை  ?
    லாவோய்ஸியர்

 

818 . இயற்பியலின் தந்தை  ?
    கலிலியோ கலிலி

 

819 . தமிழ் இலக்கியங்களின் தந்தை ?
    அகத்தியர்

 

820 . உயிரியலின் தந்தை  ?
    அரிஸ்டாட்டில் 

கருத்துகள்