முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 117 )

 1161. குளிர் காலங்களில் வாயை திறந்தால் பனி ( வெண் புகை போல் ) வெளியேறுவது ஏன்?
    உடலினுள் உள்ள காற்று வெப்பமானது. சூழலில் உள்ள காற்று குளிர் காலங்களில் அதிக குளிர்வடைந்து குளிர்விக்க ஏதுவானதாகயிருக்கும். உடலிலிருந்து வெதுவெதுப்பான காற்று வெளியேறும் போது அந்த காற்று , சூழலின் காற்றினால் குளிர்விக்கப்பட்டு  உறைந்து மேகத்திற்கு ஒப்பானதாக பனிமூட்டமாகிறது.



1162. "பொங்குகடல்" - இந்த சொல்லில் எந்த இலக்கணம் பயின்று வந்துள்ளது?
    வினைத்தொகை ( பொங்கிய கடல் - பொங்குகின்ற கடல் - பொங்கும் கடல் )
[தமிழ் இலக்கணத்தில் வினைத்தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒருசேரக் குறிக்குமாறு வரும் ஒரு பெயர்ச்சொல். பரவலாக எடுத்துக்காட்டப்படும் சொல் ஊறுகாய் என்பது. இச்சொல் ஊறுகின்ற காய் ( நிகழ் காலம் ), ஊறின காய் ( கடந்த காலம் ), ஊறும் காய் ( எதிர் காலம் ) என முக்கால வினைகளையும் குறிக்கும்.]


 

1163. லேசர் விளக்கை கண்டுபிடித்தவர்?
    டி.ஹெச்.மெய்மன் ( Theodore H.Maiman )

 

 

1164. இயந்திர பொறியியலின் தந்தை எனப்படுபவர்?
    ஜேம்ஸ் வாட்
[James Watt is often coined the father of mechanical engineering]

 

1165. நவீன கணினி அறிவியலின் தந்தை எனப்படுபவர்?
    ஆலன் டூரிங்
[Alan Turing is often considered the father of modern computer science]

 

1166. விமானத்தின் கருப்பு பெட்டி என்ன நிறமுடையது?
    செம்மஞ்சள் நிறம் ( ஆரஞ்சு நிறம் )

 

1167. விமானத்தில் கருப்பு பெட்டியின் பயன்?
    விமான கருப்புப் பெட்டி (Black box/flight recorder) விமானத்தினுள் தகவல் சேமிக்கப் பயன்படும் ஒரு தொழில்நுட்பக் கருவியாகும். விமானம் விபத்திற்குள்ளாகும் போது அது தொடர்பான காரணங்களை அறிவதற்கு/ஆராய்வதற்கு இக்கருவி பெரிதும் உதவும். இதனை கருப்பு பெட்டி என்று அழைத்தாலும், இது செம்மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

 

1168. பூமத்திய ரேகை என்பது?
    பூமத்திய ரேகை ( Equator ) அல்லது நிலநடுக்கோடு என்பது பூமியை குறுக்குவாக்கில் இரு சமதுண்டுகளாகப் பிரிக்கும் கற்பனைக் கோடு ஆகும்.

 

1169. தீர்க்கக்கோடுகள் ( Longtitudes ) என்பவை?
    புவி மாதிரியின் மீது மேலிருந்து கீழாகவோ அல்லது வடக்கிலிருந்து தெற்க்காகவோ வரையப்பட்டுள்ள கற்பனைக்கோடுகள் தீர்க்கக்கோடுகள் ஆகும்.

 

1170. அட்சக்கோடுகள் ( Latitudes ) என்பவை?
    புவி மாதிரியின் (Globe) மீது இடமிருந்து வலமாகவோ அல்லது மேற்க்கிலிருந்து கிழக்காகவோ வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் அட்சக்கோடுகள் என அழைக்கப்படுகின்றன.

கருத்துகள்