முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 119 )


 

1181. நெய்யின் பூர்விகம்?

        இந்தியா


1182. நெய் மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டில் எதில் கொழுப்பு ( கொலஸ்ட்ரால் ) அதிகம்?
    வெண்ணெய்


1183. நெய் எவ்வாறு பெறப்படுகிறது?
    வெண்ணெய் உருக்கப்பட்டு நெய் பெறப்படுகிறது.


1184. புகழ்பெற்ற வெண்ணெய்?
    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் உற்பத்தி செய்யப்படும் வெண்ணெய் மற்றும் நெய் இந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும்.


1185.  சித்த மருத்துவத்தில் மருந்துகளுக்குத் துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் பயன்படுவது?
    நெய்


1186. அணு ஆற்றலினால் இயங்கும் கப்பலை முதன்முதலாக தயாரித்த நாடு?
    அமெரிக்கா


1187. நிறங்களின் ராஜா?
    சிவப்பு நிறம் [ Red is the king of colors. ]


1188. செயல்பட்டுக்கொண்டிருக்கும்  எரிமலைகள் அதிகமாக உள்ள நாடு?
    இந்தோனேசியா


1189. அம்மீட்டரின் பயன்பாடு?
    மின்னோட்டத்தை அளக்க பயன்படுகிறது.


1190.  வோல்ட்மீட்டரின் பயன்பாடு?
    மின்னழுத்தத்தை அளக்க பயன்படுகிறது.

கருத்துகள்