முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 120 )

 1191. உலகின் மிகப்பெரிய கழிமுகம்?
    சுந்தரவனம் ( இந்தியா )
[டெல்டா என்பதற்குரிய தமிழ்ச்சொல், கழிமுகம் என்பது. ஆறு கடலில் சேர்ந்து கலக்குமிடத்தையொட்டிய நிலப்பகுதிக்குக் 'கழிமுகம்' என்று பெயர். 'கடைமடை' என்றும் சொல்லலாம்.]

1192. நைல் நதியின் இரண்டு துணை ஆறுகள்?
    நைல் ஆறு, வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இருபெரும் துணை ஆறுகளைக் கொண்டது. இவற்றில் வெள்ளை நைல் அதிக நீளம் கொண்டது.

1193. பண்டைய எகிப்திய மொழியில் நைல் என்பதன் பொருள்?
    பெரிய ஆறு

1194. தமிழகத்தில் கேழ்வரகு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது?
    கிருஷ்ணகிரி

1195. குழந்தைகள் நீதிமன்றம் அமைந்துள்ள முதல் மாநிலம்?
    டெல்லி

1196. எவ்விடத்தில் தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது?
    தஞ்சாவூர்

1197. அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?
    ஜான் டால்டன்

1198. ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது?
    பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்.

1199.  நவீன அணுக்கொள்கை, அணுவைப் பற்றி கூறுவது என்ன?
    அணுக்கள் பிளக்ககூடியவை.

1200. அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?
    ரூதர்ஃபோர்டு

கருத்துகள்