முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 121 )


1201. சிறுபொறி = சிறுமை + பொறி. இதில் பயின்று வந்துள்ள புணர்ச்சி விதி யாது?
    ஈறு என்றால் கடைசி என பொருள். சிறுமை என்ற முதல் சொல்லிலுள்ள கடைசி ( ஈறு ) எழுத்தாகிய மை என்ற சொல் நீங்கி சிறுபொறி என சேர்ந்துள்ளது. ( புணர்ச்சி - சேருதல் ) இவ்வாறு கடைசி எழுத்து மறைந்து புணர்வதன் புணர்ச்சி விதி , "ஈறு போதல்" எனப்படும்.

1202. சிறுபொறி = சிறுமை + பொறி. இதில் நிலைமொழி யாது?
    சிறுமை என்ற முதல் சொல் நிலைமொழி.

1203. சிறுபொறி = சிறுமை + பொறி. இதில் வருமொழி யாது?
    பொறி என்ற இரண்டாம் சொல் வருமொழி.

1204.  சிறுபொறி என்ற சொல்லில் பயின்று வந்துள்ள இலக்கணநயம் யாது?
    சிறுபொறி என்ற சொல் சிறிய பொறி எனுமாறு பொருள் தரும்‌. சிறியது என்பது ஒரு பண்பாதலால் இதில் "பண்புத்தொகை" என்ற இலக்கணநயம்  பயின்று வந்துள்ளது.

1205. " Shoe Flower " அல்லது சீன ரோஜா என அழைக்கப்படும் மலர்?
    செம்பருத்தி ( hibiscus rosa sinensis )

1206. 1/2 என்பது?
    அரை

1207. 1/4 என்பது?
    கால்

1208. 1/8 என்பது?
    அரைக்கால்

1209.  1/16 என்பது?
    வீசம்

1210. 1/80 என்பது?
    காணி

கருத்துகள்