முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 126 )


1251. மழை காலங்களில் வெளிவரும் சிவந்த மென் பட்டு துணி வகை போன்ற நிறத்தை ஒத்த பூச்சி?

    மூதாய் பூச்சி ( வெல்வெட் பூச்சி - Velvet Insect )

1252. மூதாய் எந்த பூச்சியினத்தை சார்ந்தது?
    சிலந்தி வகை

1253. சித்த மருத்துவத்தில் மூதாய் பூச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    இந்திரகோப பூச்சி

1254. மூதாய் பூச்சியின் மருத்துவ பயன்?
    இதிலிருந்து பெறப்படும் எண்ணெய் முடக்குவாத சிகிச்சைக்கு பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது

1255. மூதாயின் மற்றுமொரு பெயர்?
    தம்பலப்பூச்சி
[கிச்சுக் கிச்சுத் தம்பலம் என்பது சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. மூதாய் பூச்சியை உடலில் செல்ல விட்டால் அதன் முன் கொம்புகளினால் தொடர்ந்து தொட்டுக்கொண்டே செல்லும் ( கடிக்காது ). இது கிச்சுக் கிச்சு மூட்டும்.]



1256. வரிக்குதிரையின் நிறம்?
    கருப்பில் வெள்ளை வரிகள் ( வெள்ளையில் கருப்பு வரிகள் கிடையாது )

1257. மிகப்பெரிய புறா வகை?
    விக்டோரியா ராணியின் கிரீடமணிந்த புறா ( Victoria Crowned Dove )

1258. கொலம்பியாவின் குறிப்பிட்ட வண்ணத்துப்பூச்சி வகை ஏன் 89'98 என அழைக்கப்படுகிறது?
    அதன் இறக்கைகளில் 89 மற்றும் 98 போன்ற அமைவு முறைகள் உள்ளன.

1259. பாம்பு வண்ணத்துப்பூச்சி ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
    அதன் இறக்கைகள் பாம்புகளை போல் உள்ளன.

1260. தன் பின்னால் இருப்பவற்றை தலையை திருப்பாமலேயே உணர்பவை?
    முயல் மற்றும் கிளி

கருத்துகள்