முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (139)


 

1381. கேரளத்தின் மாநில விலங்கு?
    யானை

1382. கேரளத்தின் மாநில பறவை?
     மலை இருவாய்ச்சி ( Great Hornbill )

1383. கேரளத்தின் மாநில மரம்?
    தென்னை

1384. கேரளத்தின் மாநில மலர்?
    கொன்றை ( Golden Shower Tree )

1385. கேரளம் என்பதன் பெயர்க்காரணம்?
    பண்டைய சேரர்களின் ஆட்சிநிலம் மலையாளதேசமாகிய கேரளம். ஆகவே , சேரளம் , கேரளமாயிருக்கும் என தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் , எனது எண்ணப்படி , கேரம் என்றால் தமிழில் தேங்காய் (நாளிகேரம்) என பொருள். தேங்காய் உற்பத்தியில் முதலிடத்திலுள்ள இந்திய மாநிலம் கேரளமே ! உப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் உப்பளம் எனப்படுவது போல கேரம் உற்பத்தி செய்யப்படும் இடம் கேரளம் என்றாயிருக்குமோ என்பது என் ஐயம்)

1386. ஒரு பொருளை வாங்கிக்கொள்ளும் பொருட்டுப் மற்றவரிடம் வினாவும் வினா?
    கொளல் வினா
[மாணவன் புத்தகக் கடைக்குச் சென்று தமிழ் புத்தகம் உள்ளதோ? என கேட்பது கொளல் வினா.]


1387. பிறர் அறிவை அளந்தறியவும் அறியாதவர்க்கு உண்மைப் பொருளை உணர்த்தவும் தாம் அறிந்த ஒரு பொருள் பற்றிப் பிறரிடம் வினாவுவது?
    அறிவினா
[இப்பாடற் பொருள் யாது? என ஆசிரியர் மாணவரிடம் வினாவுதல், அவன் அறிவை அளந்தறியவும், உண்மைப் பொருளை அவனுக்கு உணர்த்தவுமாதலின் இவ்வினா அறிவினாவாகும்.]

1388.தெரியாத ஒன்றை தெரிந்துகொள்ளும் பொருட்டு கேட்கப்படும் வினா?
    அறியாவினா
[இப்பாடற் பொருள் யாது? என மாணவன் ஆசிரியரிடம் வினாவுதல். மாணவன் தான் அறியாத பொருளை அறிந்து கொள்ள வினாவுதல் அறியா வினாவாகும்.]

1389. இதுவோ அதுவோ என ஐயத்தைப் போக்கிக் கொள்ள கேட்கப்படும் கேள்வி?
    ஐயவினா
[தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ? இது சந்தேகத்தை தீர்த்து கொள்வதற்காக கேட்கப்படும் கேள்வி.]


1390. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற்பொருட்டு வினாவப்படும் வினா?
    ஏவல்வினா
[“இப்பாடலை மனப்பாடம் செய்து விட்டாயா?” என்று வினாவுதல் ஏவல் வினா ஆகும்.]

கருத்துகள்