முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (140)


 

1391. இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்தற் பொருட்டு வினாவுவது?

    கொடை வினா
[புலவரிடம் பொருள் இல்லையோ? என்று மன்னன் புலவரிடம் வினாவுதல் கொடை வினாவாகும். கொடுத்தற் பொருட்டு வினாவுவதால் கொடை வினாவாயிற்று.]


1392. ”நெல்லைக்கு வழி யாது?” என்று வினவினால் ‘இது’ என்பது போலச் சுட்டிக் கூறும் விடை?
    சுட்டு விடை

1393.”இது செய்வாயா?” என்று வினவியபோது, ’மாட்டேன்'’ என்பதுபோல எதிர்மறுத்துக் கூறும் விடை?
    மறை விடை

1394. ”இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்வேன்’ என்பதுபோல உடன்பட்டுக் கூறும் விடை?
    நேர்விடை

1395. ”இது செய்வாயா?” என்று வினவியபோது, ’நீயே செய்’ என்று ஏவிக் கூறுவது?
    ஏவல் விடை

1396. "இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்யாமலிருப்பேனோ?’ என்று வினாவையே விடையாகக் கூறுவது?
    வினா எதிர் வினாதல் விடை

1397. நீ படித்தாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலித்தது’ என  தனக்கு நேர்ந்ததை விடையாக கூறுவது?
    உற்றது உரைத்தல்விடை

1398. நீ படிப்பாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலிக்கும்’ என தனக்கு நிகழ உள்ளதைக் கூறுவது?
    உறுவது கூறல் விடை

1399. ”ஆடுவாயா?” என்று வினவிய போது, ’பாடுவேன்’ என்று ஆடுவதற்கு இனமான பாடுவதனை விடையாகக் கூறுவது?
    இனமொழிவிடை

1400. எந்ந நூல் வினா மற்றும் விடை வகைகளை விவரிக்கிறது?
    நன்னூல்
 

கருத்துகள்