முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (141)

  

1401. மிக நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர்?
    நேரு  

1402. முதல் பெண் பிரதமர்?
    இந்திரா காந்தி

1403. முதல் பிரதமர்?
    நேரு

1404. உலோகங்களின் ராஜா?
    தங்கம்
 
1405. உலோகங்களின் ராணி?
    வெள்ளி

1406. ஆண்பனை எவ்வாறு தமிழில் அறியப்படுகிறது?
    ஏற்றை

1407. பெண்பனை எவ்வாறு தமிழில் அறியப்படுகிறது?
    பெண்ணை
[பனையில் ஆண் மரங்கள் பூக்குமே ஒழியக் காய்க்கா, ஆனால் பெண் பனைகளுக்குச் சிறப்பான காரணப்பெயர் பெண்ணை என்பது. பெண்கள் குழந்தை பெறுவது போல, பெண்ணை (பெண் பனைகள்) குரும்பைகளை ஈனுகின்றன. பலா, தென்னை மரங்களில் ஆண் பூக்களும், பெண் பூக்களும் ஒரே மரத்தில் இருக்கின்றன. எனவே எல்லாத் தென்னை மரங்களும், பலா மரங்களும் குலை ஈனுகின்றன. ஆனால் பனையில் பாற்பகுப்பு இருப்பதால் ஆண்பனை ஆண்பூவும், பெண்பனை பெண்பூவும் பூக்கும். ஆனால் ஆண்பனை காய்க்காது.]


1408. தூக்கணாங்குருவிகள் எந்த பனையில் கூடுகட்டும்?
    பெண்ணை ( பெண்பனை )

1409. இளம்பனைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
    வடலி

1410. பனையில் எத்தனை வகைகள் உள்ளன?
    34
[1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை]

கருத்துகள்