முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (162)

 1611. உடல் வெப்பநிலையை சுற்றுச்சூழலை சார்ந்திராமல் தானாகவே மாற்றும் உயிரினங்கள்?

    வெப்ப இரத்த பிராணிகள்   (உதாரணம் : மனிதன். குளிர் காலங்களில் கூட நம் உடல், ஏற்ற வெப்பத்துடன் இருக்கும். Internally regulated body temperature independent of the surroundings)

1612. உடல் வெப்பநிலையை சுற்றுச்சூழலை சார்ந்திருப்பதால் மட்டுமே மாற்றும் உயிரினங்கள்?
    குளிர் இரத்த பிராணிகள்  
(உதாரணம் : ஊர்வன ஜீவராசிகள். உடலை வெப்ப பதத்தில் வைத்துக்கொள்ள இவை வெப்பமான பகுதிகளுக்கும் குளிர்வாக வைத்துக்கொள்ள குளிர்ந்த பகுதிகளுக்கும் செல்கின்றன. Externally regulated body temperature dependent of the surroundings)


1613. சிலநேரங்களில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, திடீரென கீழே விழுவதுபோல தோன்றும். இதற்கு அறிவியலில் என்ன பெயர் ?
    ஹிப்னிக் ஜெர்க் (Hypnic Jerk)  
[ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கீழே விழுவது போன்ற உணர்வு இன்று வரையும் தெளிவான, முழுமையான விடை கிடைக்காத மர்மமாக தான் இருக்கிறது. இதை சார்ந்து நிறைய தியரிகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.]


1614. சிலநேரங்களில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, யாரோ நம்மை அசைய விடாமல் அழுத்தி மூச்சுத்திணறலை ஏற்படுத்துமாறு செய்வது போல தோன்றும். இதற்கு அறிவியலில் என்ன பெயர் ?
    ஸ்லீப் பாரலைஸிஸ் (Sleep Paralysis)  
[தூக்கத்தின் முதல் நிலையான REM ஸ்லீப் எனப்படும் ‘கண்கள் மூடிய நிலையிலும் கருவிழிகள் இயங்கும் நிலை’ தாண்டி இங்கே அடுத்த நிலைக்கு உறக்கம் செல்லவில்லை. மூச்சு விடுதல் போன்ற இயல்பான உடல் இயக்கங்கள் தொடர்ந்து நிகழ்ந்தாலும், உங்கள் உடல் செயல்பட மறுக்கிறது. ஏனென்றால், அதற்கு அப்போது ஓய்வு தேவை. கிட்டத்தட்டத் தொழிலாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் போலதான் நம் உடலும் இங்கே வேலைநிறுத்தம் செய்கிறது. அதைக் கட்டுக்குள் கொண்டுவர, இங்கே நம் மூளை ஒரு விந்தையை நிகழ்த்துகிறது. உங்களின் உடல் எழ வேண்டும், நீங்கள் தூக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதே அதன் விருப்பம். எனவே, உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதுபோல ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. மிகுந்த சிரமத்துக்கு உண்டானாலும், உங்கள் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. உடனே, உங்கள் மூளை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கிறது. உங்கள் அறைக்குள் யாரோ இருப்பது போன்றும், அந்த உருவம் உங்களைத் தாக்க வருவது போன்றும் ஒரு காட்சியை கண் முன்னே ஓட்டிக் காட்டுகிறது. அதிலிருந்து தப்பிக்க, அல்லது திரும்பத் தாக்க உடல் எழுந்துதானே ஆக வேண்டும்? இது மிரட்டி மடியாத செல்லப் பிள்ளையை அடி கொடுத்து வேலை வாங்குவது போலதான்.]


1615. உக்ரைன் நாட்டின் தேசிய பறவை?
    இராப்பாடி (Nightingale)  

1616. அணுக்கதிர் வீச்சினாலும் அழியாத உயிரினம் ?
    கரப்பான் பூச்சி

1617. சந்திர கிரகணம் எந்த நாளில் ஏற்படும்?
    பௌர்ணமி

1618. சூரிய கிரகணம் எந்த நாளில் ஏற்படும்?
    அமாவாசை

1619. விலங்கு செல்லில் மிக நீளமானவை ?
    நரம்பு செல்

1620. பருத்தி விதைகளிலிருந்து நூலை பிரிக்கும் முறைக்கு என்ன பெயர்?
    ஜின்னிங் (Ginning)

கருத்துகள்