முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (163)

 1621. ஒன்றை தொடர்ந்து நூறு பூஜ்ஜியங்கள் வரும் எண்?
    கூகோள்
[Googol is the digit 1 followed by 100 zeroes, while googolplex is 1 followed by a googol zeros.]

1622. உலகிலேயே மிகப்பெரிய எண் என கருதப்படுவது?
    கூகோள்பிளெக்ஸ் (எழுத முடியாது )
[A Googolplex is considered to be the biggest number in the world. It is written as 10googol. The number 10googol can also be expressed in the exponential format that will equal 10^10^100.]


1623. கூகிள் தேடுபொறியின் (Google Search Engine) பழைய பெயர்?
    பேக்ரப் (Backrub)

1624. கூகிள் தேடுபொறியின் பெயர்க்காரணம்?
    கூகோள் என்பது ஒன்றை தொடர்ந்து நூறு பூஜ்ஜியங்கள் வரும் எண் என அறிந்தோம்(). இந்த கட்டுக்கடங்கா எண்ணளவை போல் கட்டுக்கடங்கா தரவுகளை வைத்திருப்பதால் கூகிள் என பெயரிடப்பட்டது. முதலில் கூகோள் என பெயரிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் , கூகிள் என்ற பெயரே பின்னர் வைக்கப்பட்டது.
[The name Google  was derived from a misspelling of Page's original planned name, googol (a mathematical term for the number one followed by 100 zeroes).]


1625. கூகிள் என்ற பெயர் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?
    ஆல்ஃபபெட் (Alphabet)  
[முகநூலின் (Facebook) பெயரையும் மெட்டா (Meta) என மாற்றியுள்ளனர். ஆனால் , நம் ஆட்கள் அதை ஃபேஸ்புக் என்றே அழைத்து பழகியமையால் அதை மெட்டா என மறந்தும் அழைக்கமாட்டார்கள். 2015லேயே கூகிளை , ஆல்ஃபபெட் என பெயர் மாற்றியுள்ளனர். ஆனால், நாம் இன்னும் கூகிள் என்றே அதை அழைக்கிறோம். (சிலர் : பெயர் மாற்றியதே தெரியாது....)]


 Google என்ற பெயர், கூகை என்ற தமிழ் சொல்லை சற்று ஒத்துப் போவதை கவனித்தேன். கூகை என்றால் ஆந்தை என்று பொருள்.கூ என்றால் அதிகம் அல்லது பெரிய என பொருள். (உதாரணம் : கூடுதல்) ஐ என்றால் கண் என பொருள். (ஆங்கிலத்திலும் Eye என்றால் கண் தானே ). கூகை = கூகு + ஐ ---> இடை மெய்உகரம் திரிந்து, கூகை. ஆந்தையின் கண்கள் எத்துணை பெரியவை ! அவற்றிலிருந்து தப்பாத இரைகள் சொற்பமே ! அதுபோல் , கூகிள், எதை தேடினாலும் எடுத்து வந்து தருவதனால் இப்படி பெயர் இருக்குமோ என எண்ணினேன். சிறிது நகைப்பிற்குரிய விளக்கமாகவுள்ளதே என்றும் எண்ணினேன். புலனத்தில் (WhatsApp) , முகவடிகளில் (Emojis) Google என தேடும்போது ,  இந்த ஆந்தையின் கண்கள் போன்ற முகவடியைக்கண்டு சற்றே அதிசயித்தேன். (Google - கண்களை உருட்டுதல்)  மேலும் , மீசோ அமெரிக்க பகுதிகளில் வாழும் மாயன் என்ற இனத்தோரின் கடவுளர்களில் , குகுள்கண் (Kukulkan) என்ற ஒருவர் விண் ஆராய்ச்சியின் தெய்வமாக உள்ளார். குகுள்கண் என்ற சொல்லிலும் கூகை ஒழிந்துள்ளது. ஆராய்ச்சி தொடர்புடைய தெய்வம் என்பது நாம் கூகிளில் ஆராய்வதை நினைவுறுத்துகிறது. குகுள்கண் என்ற சொல்லில் கண் என்ற சொல்லும் உள்ளது. (ஒருவேள இருக்குமோ? )

1626. தமிழ் செய்யுள்களில் அந்தாதி அன்றால் என்ன?
    ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது, அந்தாதிச் செய்யுள் ஆகும்
[அந்தாதி = அந்தம் (முடிவு) + ஆதி (தொடக்கம்)]


1627. அந்தாதியின் வேறு பெயர்கள்?
    ஈற்றுமுதலி / கடைமுதலி


1628. கம்பர் இயற்றிய அந்தாதி நூல்கள்?
    சரஸ்வதி அந்தாதி , சடகோபர் அந்தாதி

1629. காலத்தால் முற்பட்ட அந்தாதி இலக்கியம்?
    அந்தாதி இலக்கியங்களுள் காலத்தால் முற்பட்டது, காரைக்கால் அம்மையார் பாடிய ''அற்புதத் திருவந்தாதி''.

1630. தமிழ் இலக்கியங்களின் தந்தை?
    அகத்தியர்

கருத்துகள்