முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (165)

 1641. கோட்டுரு (Graph) என்பது?
     முனைகளும் விளிம்புகளும் (Vertices and Edges)

1642. ஒரு கோட்டுருவின் வரிசை (Order of a Graph) என்பது?
     முனைகளின் எண்ணிக்கை (Number of Vertices)

1643. ஒரு கோட்டுருவின் அளவு (Size of a Graph) என்பது?
     விளிம்புகளின் எண்ணிக்கை (Number of Edges)

1644. கோட்டுருவியலின் தந்தை (Father of Graph Theory)?
     ஆய்லர் / யூலர்  [Euler  invented graph theory in the 18th century]

1645. சிம்பான்சி (Chimpanzee) குரங்கின் தமிழ் பெயர்?
     மாந்தக்குரங்கு  

1646. முனைகள் (Vertices) ஒரே வரிசையில் அமையப்பெற்ற கோட்டுரு ?
     பாதை கோட்டுரு [Path Graph Informally, a path in a graph is a sequence of edges, each one incident to the next.]

1647. முனைகளுக்கிடையே விளிம்புகள் ஏதுமில்லாமல் காணப்படும் கோட்டுரு?
     வெற்றுக் கோட்டுரு (Null Graph) [A null graph is a graph in which there are no edges between its vertices. A null graph is also called empty graph.]

1648. ஒரேயொரு முனையுடன் விளிம்புகளே இல்லாத கோட்டுரு?
     அற்பக் கோட்டுரு (Trivial Graph) [A trivial graph is the graph which has only one vertex.]

1649. ஒரு முனையின் படி (Degree of a Vertex) என்பது?
     அந்த முனையுடன் ஒன்றியுள்ள விளிம்புகளின் எண்ணிக்கை [In graph theory , the degree of a vertex is the number of edges connecting it.]

1650. ஒரு முனையை அதனுடையே இணைக்கும் விளிம்பு?
     கண்ணி (Loop) [In graph theory, a loop (also called a self-loop or a buckle) is an edge that connects a vertex to itself.]

கருத்துகள்