முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (168)

 1671. மரபியல் குறைபாடுகளை நீக்கும் மூலிகைகள்?
         வில்வம் - கறிவேப்பிலை [கறிவேப்பிலையின் ருசி, வில்வ இலையின் ருசியை 25% ஒத்திருப்பதை இரண்டையும் ருசி பார்த்தவர்கள் அறிவர்.]

1672. பெரும் அரிப்பை ஏற்படுத்தும் செடி?
         செந்தட்டி செடி / சிறுகாஞ்சொறி [எதிர்பாராமல் இதனை நாம் தொட்டாலோ , இல்லை இது நம் மீது பட்டுவிட்டாலோ , வலியோடு கூடிய பெரும் அரிப்புதான்...]

1673. பச்சை நிறத்திலுள்ள தாவரங்கள் பெரும்பாலும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
         ஆட்டோட்ரோஃப்கள் (Aututrophs) [தமக்கு வேண்டிய உணவை தாமே தயாரிப்பதனால் இவ்வாறு பெயர். Green plants are known as autotrophs. Because green plant can make their own food with the help of sunlight, water, carbon dioxide and chlorophyll.]

1674. இரவில் புளிய மரத்தின் அடியில் உறங்ககூடாது என்பது ஏன்?
         புளிய மரம் பேய்களின் வசிப்பிடம் என்ற கருத்து உண்டு. இதனாலேயே கிராமங்களில் இரவில் இதனருகில் செல்வாரில்லை. ஏன் இந்த கருத்து? இதன் பின்னணி யாதெனின் , இரவில் புளியமரத்தில் அதிக அளவு கரியமில வாயு (CO2) வெளிப்படுவதன் காரணமாக பறவைகள் கூட அதை உணர்ந்து இரவில் தங்குவதில்லை. அது போல புங்கை மரமும், புளிய மரத்தைப் போல அதிகளவு கரியமில வாயுவை வெளிப்படுத்துவதன் காரணமாக பறவைகள் இந்த மரத்திலும் இரவில் தங்குவதில்லை. நாம் தங்கினால் என்ன ஆவோம்?  பகலில் மட்டுமே இதுபோன்ற மரங்கள் ஆக்சிஜன் எனப்படும் உயிரிவாயுவை தருபவை‌.

1675. கபசுர குடிநீரில் எத்தனை மூலிகைகள் அடங்கியுள்ளன?
         15 மூலிகைகள்
 

1676. புதுடெல்லியின் மாநில பறவை?
         சிட்டுக்குருவி

1677. ஆப்பிள் அதிகமாக பயிரிடப்படும் நாடு?
         சீனா [உலகிலேயே அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவிற்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது.]

1678. ஆரஞ்சு பழத்தின் தலைநகர்?
         பிரேசில்

1679. அன்னாசி பழத்தையுண்ணும்போது வாயில் அரிப்பு ஏற்பட காரணம்?
         அன்னாசியில் உள்ள புரோமெலியன் என்ற நொதியின் தாக்கத்தினால்தான் அரிப்பு ஏற்படுகிறது. [The irritation is caused by a combination of enzymes in pineapples called bromelian, which break down proteins and essentially attack your tongue, cheeks, and lips on contact. But once you chew and swallow it, both your saliva and stomach acids overtake them.]

1680. அன்னாசி என்பது போர்ச்சுகீசிய மொழிச்சொல். தமிழில்?
         செந்தாழை

கருத்துகள்