முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (169)

 

1681. தனிமங்களின் கடினத் தன்மையை அளக்க உதவும் அளவுகோலாக உள்ள அளவீடு?
         மோசின் அளவுகோல் (Mohs scale of mineral hardness)

1682. ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது?
         ஒப்பிடுவதன் மூலம் தான். உதாரணமாக, இரும்புக் கம்பியைக் கொண்டு சுண்ணாம்புக் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம். அந்த இரும்பையும் கார்போரோண்டம் (ஆழ்துளைக் கிணறு தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம். கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம். வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!

1683. திண்மையை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோசின் திண்மை அளவுகோல் என்ற முறையின்படி வைரத்தின் திண்மை எண்?
         10

1684. வைரம் என்றால் என்ன பொருள்?
         வயிரம் என்பதில் இருந்து வைரம் என்னும் சொல் உண்டானது. (வயிரம்=உறுதி)
[வைரத்தின் ஆங்கில பதமான ‘டைமண்ட்’ கிரேக்க வார்த்தையான ‘அடாமஸ்’ என்ற சொல்லிலிருந்து தோன்றியது. இதன்  பொருள் ‘வெல்ல முடியாதது’.]


1685. வைரங்கள் பல நிறங்களில் காணப்பட காரணம்?
            வைரங்கள் பல்வேறு நிறங்களில் பளிச்சிட அவற்றில் அடங்கி உள்ள ரசாயனப் பொருட்களே காரணமாக அமைகின்றன. நைட்ரஜன் அதிகமாக இருந்தால் வைரம் மஞ்சள் நிறத்திலும், போரான் அதிகமாக இருந்தால் நீல நிறத்திலும் ஜொலிக்கும்.
 

1686. தென்னிந்திய கட்டிடக்கலை?
         திராவிடபாணி

1687. வட இந்திய கட்டிடக்கலை?
         நாகரபாணி

1688. தென்னிந்திய மற்றும் வட இந்திய கட்டிடக்கலைகள் இரண்டும் கலந்த கட்டிடக்கலை?
         வேசாராபாணி

1689. எரிமலைகளின் வகைகள்?
         செயலற்ற எரிமலை, செயல்படும் எரிமலை, உறங்கும் எரிமலை.
[உறங்கும் எரிமலைகள் ஒரு காலத்தில் தொடர்ந்து நெருப்புடா என குழம்பைக் கக்கியவைதான். இப்போதுதான் களைத்துத் தூங்கிக்கொண்டிருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் தூக்கம் கலைந்து எழுந்துவிடலாம். இத்தாலி மற்றும் ஹவாய் தீவுகளுக்குச் சென்றால் இவற்றின் குறட்டை சத்தத்தை கேட்கலாம்.]


1690. தமிழகத்தில் உள்ள செயலற்ற எரிமலை?
        திருவண்ணாமலை குன்று

கருத்துகள்