முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (172)

 1711. இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
     விசாகப்பட்டினம்

1712. குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்?
     விஸ்வநாதன் ஆனந்த்

1713. கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர்?
     SPRUCE

1714. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது?
     சவுதி அரேபியா

1715. நோபல் பரிசு எந்தத் துறைக்குக் கொடுக்கப்படுவதில்லை?
     கணிதம்

1716. ஏன் சில நேரங்களில் நாய்கள் புல்லை திண்கின்றன?
     உணவு செரிப்பதற்கு உதவிசெய்யும் நார்ச்சத்துக்கள் புல்லில் அதிகம். நாம் கண்டுணரும் முன்னரே நாய்கள் உண்டுணர்ந்துள்ளன. [Dogs need roughage in their diets and grass is a good source of fiber. A lack of roughage affects the dog's ability to digest food and pass stool, so grass may actually help their bodily functions run more smoothly.]

1717. வானில் விமானம் செல்லும்போது அதன் இரைச்சல் சத்தம் ஒரு பக்கத்திலிருந்து வரும். ஆனால் , விமானமோ எங்கோ பறக்கும். எதனால்?
     ஒலி தாமதமாக நம்மை வந்தடையும் என்பதை அறிவோம். உதாரணமாக , மின்னல் வந்த பின் தான் இடி வரும்‌. இடி என்பது ஒலி தானே. அதுபோல் தான் தூரத்தில் பறக்கும் விமான ஒலி , நம்மை தாமதமாக வந்தடைவதால் , நாம் ஒருபக்கம் பார்க்க விமானம் ஒரு பக்கம் பறக்கிறது. சிறுவயதிலிருந்தே பறக்கும் விமானங்கள் நம்மை இப்படித்தான் ஏமாற்றிக்கொண்டுள்ளன.

1718. ஏன் பச்சை மிளகாயை உண்ணும் போது உடல் அதிகம் வியர்க்கிறது?
     மிளகாயிலுள்ள காப்சிசைன் என்ற வேதிப்பொருள் , வெப்பம் ஏற்படும்போது மூளையைத்தூண்டும் நரம்புகளை தூண்டும் இயல்புடையது. மூளையும் அதிக வெப்பம்தான் போலும் என உடல் வியர்த்துபோக செய்கிறது. கண்ணீர் வரச்செய்கிறது. ஏன்? குளிர்விக்கத்தான்.

1719. ஒரு இனிப்பை உண்ட பின் மற்றொரு இனிப்பை உண்டால் அதன் சுவை ஏன் தெரிவதில்லை?
     நுனி நாக்கில்தான் இனிப்பு சுவையை அறியும் சுவை அரும்புகள் உள்ளன. ஒரு முறை இனிப்பை நாம் உண்ணும்போது இவற்றினால்தான் நாம் இனிப்பை ருசிக்கிறோம். இன்று உண்ட இனிப்பு நாளை வரை இனித்துக்கொண்டிருக்குமா? இனிப்பை உணர்ந்த நாக்கில் அடுத்து நடப்பது இனிப்பு சுவையை இழக்கச்செய்யும் நிகழ்வுதான். இதை மூளையே மேற்கொள்கிறது. (அரைத்ததையே அரைப்பது மூளைக்கும் பிடிக்காது போலும்.) இந்த இனிப்பு மறப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும்போதுதான் நாம் வேறு ஓர் இனிப்பை உட்கொள்கிறோம். எனவே , எவ்வளவு இனிப்பாயினும் ருசியில்லாமல் போய்விடுவது போல் நம் நாக்கு நமக்கு உணர்த்துகிறது. (பிஸ்கட்டை ஆசையோடு காஃபியில் நனைத்து சாப்பிட்டுவிட்டு பின் ருசியே இல்லாத காஃபியை குடிப்பது நம் வழக்கமாயிற்றே....)

1720. பாம்பு கடித்ததும் ஏன் இதயத்துடிப்பு குறைகிறது?
    இதயத்துடிப்பு குறைவானால் இரத்த ஓட்டம் குறையும். எனவே பாம்பு விசம் உடலினுள் பரவ தாமதமாகும். எனவே,  உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கான கால அவகாசமும் அதிகரிக்கும். இது நம் மூளை செய்யும் ராஜதந்திர காரியம். ஆனால் , விசமில்லாத பாம்பு கடித்தே சிலர் இறந்துவிடுகிறார்கள். பாம்பு விசத்தால் அல்ல! பயம் என்ற விசத்தால்!

கருத்துகள்