முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (184)

1831. குறிஞ்சி கலி பாடியவர்?

       கபிலர்  [மலையும் மலைசார் பகுதிகளும் குறிஞ்சி]

1832. முல்லை கலி பாடியவர்?
       நல்லுருத்திரன் [காடும் காடுசார் பகுதிகளும் முல்லை]

1833. மருதம் கலி பாடியவர்?
       இளநாகனார் [வயலும் வயல்சார் பகுதிகளும் மருதம்]

1834. நெய்தல் கலி பாடியவர்?
       நல்லந்துவனார் [கடலும் கடல்சார் பகுதிகளும் நெய்தல்]

1835. பாலை கலி பாடியவர்?
       பெருங்கடுங்கோ [சுரமும்  சுரம்சார் பகுதிகளும் பாலை (வெப்பமான பகுதி)]

1836. கரும்பு உற்பத்தியில் உலகளவில் முதலிடம் வகிக்கும் நாடு?
       பிரேசில்  

1837. கரும்பு உற்பத்தியில் உலகளவில் இரண்டாமிடம் வகிக்கும் நாடு?
       இந்தியா

1838. மனித பல்லின் நிறம்?
       மித மஞ்சள்
[ஒருமுறை முகத்தில் வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசியிருந்தபோது நாங்கள் கவனித்தோம்... எல்லாருடைய பற்களும் மஞ்சளாகயிருக்கிறதே என்று.... (நம்ம பல்லா இப்டிருக்கு...) நம் முகத்தின் நிறம்தான் நம் பற்களை வெள்ளையாக காட்டுகிறது... முகம் வெள்ளையாகும்போதுதான் பற்களின் நிறமும் அம்பலமானது...]

 

1839. அதிக நாடுகளையுடைய கண்டம்?
       ஆப்ரிக்கா

1840. தருமபுரியின் பழைய பெயர்?
       தகடூர்

கருத்துகள்