முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (188)

1871. வரலாற்றின் தந்தை?
       ஹெரடோட்டஸ்

1872. ஒப்புரவு என்றால் என்ன?
       பிறருக்கு உதவுதல்

1873. இரத்தக்குழாய்கள் இல்லாத உயிரி ?
       அட்டைப்பூச்சி [இரத்தக்குழாய் இல்லையேங்க்ற ஏக்கத்துலதான் எல்லாரு இரத்தத்தயும் உறிஞ்சுதுபோல...]

1874. முட்டையின் வெள்ளைக்கருவின் pH மதிப்பு?
       எட்டு (அப்டீனா காரம் )

1875. மலைகளின் இளவரசி?
       கொடைக்கானல் [மலைகளின் ராணி - ஊட்டி]

1876. அட்டை கடித்தால் ஏன் வலிப்பதில்லை?
       அட்டைகள் கடிப்பதில்லை. உறிஞ்சுகின்றன. மேலும் , அவற்றின் எச்சிலிலுள்ள நொதியானது மயக்கமூட்டும் தன்மையுடையது. எந்த பகுதியில் அட்டை உறிஞ்சுகிறதோ அந்த பகுதி சற்றுநேரம் மறத்துவிடும். எனவே , வலியும் இருப்பதில்லை. [Despite the use of the term “bite,” leeches don't actually bite with a mouth or teeth. Instead, they have very strong suckers that attach to the skin and extract the blood. In addition, leech saliva has analgesic properties that numb the area where it attaches.]

1877. கணினி சார் பார்வை குறைபாடு (Computer Vision Syndrome) என்றால் என்ன?
       கணினியையோ எந்த ஒரு டிஜிட்டல் கருவியையோ தொடர்ந்து நீண்டநேரம் நோக்கும்போது ஏற்படும் கண் பார்வை குறைபாடு.  [Digital eye strain is a group of related eye and vision problems caused by extended computer or digital device use. Symptoms include eye discomfort and fatigue, dry eye, blurry vision, and headaches. Uncorrected vision problems are a major cause.]

1878. கணினி மவுஸை கண்டுபிடித்தவர் ?
       டக்ளஸ் எங்கல்பர்ட்

1879. இணையத்தின் தந்தை (Father of Internet)?
       வின்ட் சர்ஃப்

1880. ஒரு கரைசலின் pH மதிப்பு 7 எனில் pOH மதிப்பு என்ன?
       7   [14 - pH மதிப்பு = pOH மதிப்பு :: 14-7=7]

கருத்துகள்