முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (194)

1931. வெட்டிவைக்கப்பட்ட ஆப்பிள் அடர் மஞ்சள் நிறமாக காரணம்?

     ஆப்பிள் பழம் துருப்பிடிக்கிறது....
(பொதுவாக இரும்பு துருப்பிடிப்பதை அறிவோம். இஃது சற்று வியப்பல்லவே... வெட்டப்பட்ட ஆப்பிள் துண்டிலுள்ள சாறுள்ள திசுக்களிலுள்ள கூட்டுப்பொருட்கள் புறத்திலுள்ள ஆக்சிசனோடு வினைபுரிந்து ஆப்பிள் துண்டை அடர் மஞ்சளாக்குகின்றன. இது இரும்பு துருப்பிடிக்கும் நிகழ்வோடு அப்படியே ஒன்றுகிறது.)


1932. இரும்பு எவ்வாறு துருப்பிடிக்கிறது?
     இரும்பை வேதியியலில் ஃபெர்ரஸ் என பொதுவாக அழைப்பதுண்டு. ஃபெர்ரஸ் , ஆக்சிசன் மற்றும் நீரோடு வினை புரிந்து நீரேறிய ஃபெர்ரிக் ஆக்சைடாக (Hydrated Ferric Oxide) மாறுகிறது. அதென்ன நீரேறிய ஃபெர்ரிக் ஆக்சைடு? அதுதான் துரு!
[4 Fe+ 3 O2 + x H2O  --- >  2 Fe2O3. xH2O (துரு)]


1933. துருப்பிடித்தலை எப்படி தவிர்ப்பது?
     துத்தநாக (Zinc) மின் முலாம் பூசுதல் மூலமாக...

1934. கேரளாவையும், தமிழ்நாட்டையும் இணைக்கும் முக்கிய கனவாய்?
     பால்காட்

1935. கின்னஸ் புத்தகத்தை வெளியிடும் அலுவலகம் எந்த இடத்தில் உள்ளது?
     லண்டன்

1936. நூறு கதவுகளின் நாடு  எனப்படுவது?
     எகிப்து

1937. இந்திய அரசியல் சாசனம் எத்தனை மொழிகளை அங்கீகரித்துள்ளது?
     18 மொழிகள்  

1938. அச்சிடுவதற்கு மிகவும் கடினமான மொழி?
     காஷ்மீரி

1939. தமிழ் பத்திரிக்கைகளில் கார்ட்டூனை அறிமுகம் செய்தவர்?
     பாரதியார்

1940. மெழுகுவர்த்தி அணைந்தவுடன் வெளியாகும் வாயு?
     கார்பன் மோனாக்ஸைடு

கருத்துகள்