முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (196)

1951. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர்?
     ஜானகி இராமச்சந்திரன்

1952. அடுத்தடுத்து வரும் எந்த இரு எண்களுக்கும் இடையே ஒரே ஓர் எண் வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசை?
     கூட்டுத்தொடர் வரிசை
(எடுத்துக்காட்டாக 3, 5, 7, 9, 11, 13, … என்பது ஒரு கூட்டுத்தொடர், ஏனெனில் அடுத்தடுத்து வரும் எந்த இரண்டு எண்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு இங்கே 2.அடுத்தடுத்த எண்களான 3 மற்றும் 5க்கு இடையேயான வேறுபாடு 2. அதுபோல் அடுத்தடுத்த எந்த இரு எண்களுக்கும் வேறுபாடு 2 தான்.)


1953. ஒவ்வொரு எண்ணுக்கும் அடுத்து வரும் எண், முதல் எண்ணைச் சுழி (சைபர்) அல்லாத மாறா எண் ஒன்றினால் பெருக்கி வரும் எண்ணாக அமையும் எண்களின் வரிசை?
     பெருக்குத்தொடர் வரிசை
(2, 6, 18, 54,...... என்னும் தொடர் 3 ஐப் பொது விகிதமாகக் கொண்ட ஒரு பெருக்குத் தொடருக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இதில் ஒவ்வொரு எண்ணையும் 3 ஆல் பெருக்கி அடுத்துவரும் எண் பெறப்படுகின்றது. அதாவது 2ஐ 3ஆல் பெருக்க 6. 6ஐ 3ஆல் பெருக்க 18 என இவ்வரிசை 3ன் மடங்குகளாய் நீளுகிறது. இது போலவே 1/2 ஐப் பொது விகிதமாகக் கொண்ட பெருக்குத் தொடருக்கு, 10, 5, 2.5, 1.25,..... என்பதை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.)


1954. காதல் ஹார்மோன் என அழைக்கப்படுவது?
     ஆக்ஸிடோஸின்

1955. உலகின் வலிமையான வண்டு?
     ஹெர்குலஸ் வண்டு

1956. பாரதியாருக்கு பாரதி என பட்டம் வழங்கியவர்?
     எட்டையபுர மன்னர்

1957. ஷெல்லிதாசன் எனப்படுபவர்?
     பாரதியார்

1958. இந்தியாவில் மரம் நடும் விழாவான வன மகோ உற்சவம் எந்த மாதம் நடைபெறும்?
     ஜூலை

1959. நெல் சாகுபடிக்கு ஏற்ற மண்?
     வண்டல் மண்

1960. மாட்டு வண்டியின் பாகங்கள் செய்ய பயன்படும் மரம்?
     கருவேலம் மரம்

கருத்துகள்