முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (197)

1961. நல்வழி என்ற நூலை எழுதியவர்?
     ஔவையார்

1962. மக்கள் கவிஞர் எனப்படுபவர்?
     பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

1963. தால் என்றால் என்ன பொருள்?
     நாக்கு (தாலாட்டு = தால் + ஆட்டு. நாவினால் பாடி கண்ணுறங்க வைப்பது)

1964. ஒரு வைரஸ் , DNAவிற்கு பதிலாக RNAஐ கொண்டிருந்தால் அது என்ன வகை?
     ரெட்ரோ வைரஸ்

1965. கடகரேகை , மகரரேகை மற்றும் பூமத்தியரேகை ஆகிய மூன்றும் செல்லும் கண்டம்?
     ஆப்ரிக்கா

1966. இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் எங்குள்ளது?
     நெல்லை

1967. கொழுப்பின் இரு வகைகள்?
     அதிக அடர்த்தியானது & குறைந்த அடர்த்தியானது (High Density Lipoprotein & Low Density Lipoprotein)  

1968. எது நல்ல கொழுப்பு? எது கெட்ட கொழுப்பு?
     அதிக அடர்த்தியான கொழுப்பு நல்ல கொழுப்பு. ஏனெனில் இதில் கொழுப்பு குறைவு. புரதம் அதிகம். அது இதயத்தை பாதுகாக்குமாம். குறைந்த அடரத்தியான கொழுப்பு கெட்டது‌. ஏனெனில் இதில் கொழுப்பு அதிகம். புரதம் குறைவு.

1969. ஆங்கில அகராதியில் கடைசியாக சேர்க்கப்பட்ட எழுத்து?
      J

1970. இரத்தத்தில் ஆக்சிஜன் கடத்தப்படாதபோது எந்த நிறத்தில் இருக்கும்?
     அடர் சிவப்பு (Dark Red)

கருத்துகள்