முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2. செயலுள்ள போக்குவரத்து (Active Transport)

அடர்த்தி குறைந்த பகுதியிலிருந்து அடர்த்தி நிறைந்த பகுதிக்கு மூலக்கூறுகள் நகர்த்தப்படுவதைதான் செயலுள்ள போக்குவரத்து என்கிறோம். இதற்கு அதிக ஆற்றலும் தேவை. ஆற்றின் போக்கிற்கு எதிராக நீந்துவதற்கு எப்படி ஆற்றல் தேவையோ, அப்படிதான் இதுவும். செயலுடைய போக்குவரத்திற்கு, ATP மூலக்கூறுகளினால் ஆற்றல் கிட்டும். (Active transport is a crucial cellular process that moves substances against their concentration gradient, from an area of lower concentration to an area of higher concentration. This process requires energy in the form of adenosine triphosphate (ATP) to pump  substances across the cell membrane.)
 
NEET : Which cellular process requires energy to move molecules against their concentration gradient?
A) Diffusion
B) Facilitated diffusion
C) Osmosis
D) Active transport
Answer : D) Active transport

செயலுடைய போக்குவரத்து நடைபெற உதவும் நுண் அமைப்புகள்
புரத எக்கிகள் (Protein Pumps) எனும் நுண் அமைப்புகள். இவை, செல்சவ்வில் புதைக்கப்பட்டு காணப்படும். இவைதான் செல்லின் உள்ளும் வெளியும் செல்லும் மூலக்கூறுகளை வெளியே தள்ளுவதும் உள்ளே எக்கி இழுப்பதும்! இவையே, செயலுடைய போக்குவரத்திற்கு உதவுபவை. இவற்றிற்கான ஆற்றலைதான், ATP மூலக்கூறுகள் வழங்குகின்றன. (Active transport relies on specialized protein pumps embedded in the cell membrane. These pumps act as molecular machines that facilitate the movement of specific substances.)
 
NEET : What is the primary source of energy used in active transport?
A) Glucose
B) Oxygen
C) Adenosine triphosphate (ATP)
D) Carbon dioxide
Answer 2: C) Adenosine triphosphate (ATP)

புரத எக்கிகள்
புரத எக்கிகள், மிகவும் குறிப்பிடத்தக்கவாறு இயங்குபவை. உதாரணமாக, சோடியம் பொட்டாசியம் எக்கி, சோடியத்தை வெளியே தள்ளுவதும், பொட்டாசியத்தை உள்ளே இழுப்பதுமாக செயல்படும் தன்மையுடையது. இது, வேறு மூலக்கூறுகளை சீண்டுவதில்லை. (Each active transport pump is specific to the substance it transports. For example, the sodium-potassium pump (Na+/K+ pump) is responsible for moving sodium ions (Na+) out of the cell and potassium ions (K+) into the cell.)

சோடியம் பொட்டாசியம் எக்கி
சோடியம் பொட்டாசியம் எக்கியினால்தான், நம்மால் நரம்புசார் உணர்வுகளை அறியமுடிகிறது. இதுவே, தசை சுருக்கத்திற்கும் காரணமாகிறது. ஒட்டுமொத்தமாக, செயலுள்ள போக்குவரத்து நடைபெறுவதால்தான், உடற்சமநிலை (Homeostasis) பேணப்படுகிறது. (The sodium-potassium pump is one of the most well-known examples of active transport. It helps maintain the cell's resting membrane potential and is essential for nerve impulse transmission and muscle contraction.) சோடியம் பொட்டாசியம் எக்கியில் ஒரு முறைக்கு மூன்று சோடியம் மூலக்கூறுகள் வெளியேயும், இரண்டு பொட்டாசியம் மூலக்கூறு உள்ளேயும் செல்கின்றன. (In this pump, three sodium ions are actively transported out of the cell, while two potassium ions are actively transported into the cell for every cycle. ATP provides the energy needed for this process. ATP is hydrolyzed (broken down) to ADP (adenosine diphosphate) during this energy-consuming step.)
 
NEET: In the sodium-potassium pump, how many sodium ions are pumped out of the cell for every two potassium ions pumped into the cell?
A) 1 sodium ion for 2 potassium ions
B) 2 sodium ions for 1 potassium ion
C) 2 sodium ions for 3 potassium ions
D) 3 sodium ions for 2 potassium ions
*Answer : D) 3 sodium ions for 2 potassium ions

கருத்துகள்