முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2. Mitosis

 
செல் சுழற்சியில் Interphase முடிந்ததும் அடுத்தநிலை, மைட்டாஸிஸ் (Mitosis) நிலை. இந்த நிலைதான், உடல் வளர்ச்சி, திசு மீட்டுருவாக்கம் முதலானவற்றிற்கு வழிவகுக்கும். Mitosis is a process of cell division that results in the formation of two identical daughter cells, each with the same number of chromosomes as the parent cell. This process is essential for growth, tissue repair, and the maintenance of a constant cell population in multicellular organisms.

Mitosis-ன் முதல் துணை நிலை : புரோஃபேஸ்

DNA-யும், புரதமும் ஒன்றாக சேர்ந்த அமைப்பு, குரோமட்டிடு எனப்படும். பல குரோமட்டிடுகள் ஒன்று சேர்ந்த அமைப்பு, குரோமோசோம் எனப்படும். மனிதனில், ஒரு செல்லுக்கு, 46 குரோமோசோம்கள் இருக்கும். Each human cell typically contains 46 chromosomes, organized as 23 pairs. These pairs consist of one chromosome inherited from the individual's biological mother and one from their biological father. புரோஃபேஸின்போது, இரண்டு ஒன்று போன்ற குரோமட்டிடுகள் ஒன்றுசேர்ந்து குரோமோசோமை உருவாக்கும். இந்த குரோமட்டிட் ஜோடி, நீர் நிரப்பப்பட்ட, சுரைக்காய் பலூனில், நடுவில் ரப்பரால் இறுக்கியதுபோன்ற தோற்றமுடையது. அந்த ரப்பர் இடப்பட்ட நடுப்பகுதியை, சென்ட்ரோமியர் என்பர். உட்கரு உடைந்து, அதனுள்ளிருக்கும் குரோமோசோம்கள், செல்லின் பிற பகுதிகளுக்கு பரவும் நிலையை புரோ மெட்டாஃபேஸ் என்பர். During prophase, the chromatin (a complex of DNA and proteins) condenses into visible structures called chromosomes. Each chromosome consists of two identical sister chromatids, which are held together at a region called the centromere. The nuclear envelope begins to break down, allowing the contents of the nucleus to mix with the rest of the cell.

Mitosis-ன் இரண்டாம் துணை நிலை : மெட்டாஃபேஸ்

இந்த நிலையில்தான், உட்கரு உடைந்து செல்லினுள் உலவும் குரோமோசோம்கள் அடுக்கப்படும். அங்கங்கு அலைந்துதிரியும் குரோமோசோம்கள், செல்லின் நடுப்பகுதியில் அடுக்கப்படும். இவ்வாறு அடுக்கப்பட, ஒரு சுவாரசியமான கூத்தே செல்லினுள் நடைபெறும். குரோமோசோம்களின் நடுப்பகுதியான சென்ட்ரோமியர், ஸ்பின்டிள் நார்களில் இணைக்கப்படும். இந்த ஸ்பின்டிள் நார்கள் என்பவை, செல்லின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதியில் நீட்டிக்கட்டப்பட்ட அமைப்பைப் பெற்றிருக்கும். இந்த ஸ்பின்டிள் நார்கள், ஒரு வித அதிர்வுகளோடு அசையும். இந்த அதிர்வின் இறுதியில், குரோமோசோம்கள் யாவும், நட்டநடுவில்! Metaphase is a crucial stage in mitosis where chromosomes, each composed of two sister chromatids, align precisely at the cell's metaphase plate, ensuring that each daughter cell will receive an identical set of chromosomes. This alignment is achieved through the attachment of spindle fibers to the centromeres of the chromosomes, guaranteeing the equal distribution of genetic material during the subsequent phase, anaphase, and ultimately contributing to the faithful replication of the parent cell.

Mitosis-ன் மூன்றாம் துணை நிலை : அனாஃபேஸ்

இந்த நிலையில், நடுவில் ரப்பர் இடப்பட்ட சுரைக்காய் பலூன்களாகிய குரோமோசோம்களின் நடுப்பகுதியாகிய சென்ட்ரோமியரில் பிளவு ஏற்பட்டு, மாற்றான் சூரியாக்கள் இரண்டாவதுபோல, குரோமோசோம்கள் இரண்டாகும். ஸ்பின்டிள் நார்கள், எதிரெதிர் திசைகளில் இழுக்கப்படும். எனவே, இரண்டு பக்கங்களிலும், சமமான எண்ணிக்கையில் குரோமோசோம்கள் சேர்க்கப்படும். Anaphase is characterized by the separation of sister chromatids. The centromere of each chromosome divides, allowing the spindle fibers to pull the sister chromatids apart. As a result, identical sets of chromosomes are pulled toward opposite poles of the cell.

Mitosis-ன் நான்காம் துணை நிலை : டீலோஃபேஸ்

இந்த நிலையில், நுண்ணிய ஸ்பின்டிள் நார்கள் மறையும். செல் பிரியும். இரண்டு குழுக்களாக பிரிந்து நிற்கும் குரோமோசோம்களை, புதிய உட்கரு கவசம் சூழும். குரோமோசோம்கள், மீண்டும் குரோமட்டிடுகளாக உடையும். தனி செல்கள், சைட்டோகைனசிஸ் எனப்படும் இறுதி நிலையில் உண்டாகும். Telophase marks the near completion of mitosis. Two distinct nuclei begin to form around the separated sets of chromosomes. The chromosomes begin to decondense back into chromatin. A new nuclear envelope forms around each set of chromosomes. Cytokinesis is the final step of cell division, occurring concurrently with late telophase.

கருத்துகள்