செல்லினுள் இருக்கும் உட்கரு கோளவடிவம் உடையது. புறத்திலிருந்து செல்லினுள் நீர் வருவதற்கு எப்படி அக்வாபோரின்ஸ் எனப்படும் நுண்துளைகள் உதவுகின்றனவோ, அதுபோலவே செல்லினுள் இருக்கும் நீர் உட்கருவினுள் வரவும் பல Nucleopores எனப்படும் நுண்துளைகள் உதவுகின்றன. வெறுமனே நீர் மட்டுமின்றி மூலக்கூறுகளுங்கூட உள்நுழைய இவை வழிவகுக்கின்றன. The nucleus is typically spherical and has a double-membrane structure called the nuclear envelope. This envelope has pores that allow the exchange of materials between the nucleus and the rest of the cell
NEET : What is the primary function of the nuclear pores in the nuclear envelope?
A) Regulation of nuclear size
B) Protection of DNA
C) Facilitation of the movement of molecules in and out of the nucleus
D) Synthesis of RNA
NUCLEOPLASM
செல்லின் உட்கருவினுள் உள்ள அரைநீர்மநிலையில் உள்ள பொருள் நியூக்ளியோபிளாசம். செல்லினுள் இருப்பது சைட்டோபிளாசம்! அந்த சைட்டோபிளாசத்தில் பெரும்பாலும் நீர்மமாய் உள்ளது சைட்டோசோல் என்றும் அறிந்தோம்! Inside the nucleus is a semi-fluid substance called nucleoplasm.
NUCLEOLI
செல்லின் உட்கருவினுள் வெளியடுக்கு (Membrane) எதுவும் இல்லாமல் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் காணப்படும் வட்டவடிவ அமைப்புகள் நியூக்ளியோளி. இந்த நியூக்ளியோளிதான் ரிபோசோம்களை உற்பத்தி செய்யும். அந்த ரிபோசோம்கள்தான் புரதத்தை உற்பத்தி செய்யும். Nucleoli are small, round, membrane-less structures found inside the cell nucleus. They play a crucial role in the production of ribosomes, which are essential for protein synthesis.
CHROMATIN
செல்லின் உட்கருவில் DNAயோடு புரதம் பின்னி பிணைந்து காணப்படும் அமைப்பு குரோமட்டின் வலைப்பின்னல். Chromatin is a complex of DNA and proteins found inside the nucleus of eukaryotic cells. It's the material that makes up chromosomes.
NEET : Which of the following components is found within the nucleus and contains the genetic material of the cell?
A) Mitochondria
B) Golgi apparatus
C) Endoplasmic reticulum
D) Chromatin
DNA IN NUCLEUS
ஒரு செல்லில், DNA உட்கருவில் இருக்கும். The nucleus is often referred to as the control center of the cell, and it contains the cell's genetic material, which is in the form of DNA (deoxyribonucleic acid). The DNA in the nucleus carries the genetic instructions that are necessary for the cell's growth, development, and functioning.

கருத்துகள்