முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

3. செயலற்ற போக்குவரத்து (Passive Transport)

அடர்த்தி நிறைந்த பகுதியிலிருந்து அடர்த்தி குறைந்த பகுதிக்கு மூலக்கூறுகள் நகர்த்தப்படுவதைதான் செயலற்ற போக்குவரத்து என்கிறோம். இதற்கு அதிக ஆற்றல் தேவை இல்லை. ஆற்றின் போக்கிலேயே நீந்த எதற்கு ஆற்றல்?️ (Passive transport is a biological process that allows molecules to move across a cell membrane without the input of energy. Unlike active transport, which requires energy, passive transport relies on natural, random movement or concentration gradients.)

பரவல்

செயலற்ற போக்குவரத்து பெரும்பாலும் பரவல் (Diffusion) முறையில் நடைபெறுகிறது. (Passive transport does not require the input of energy from the cell. Instead, it relies on the inherent kinetic energy of molecules and the principles of diffusion.)

பரவலின் இரண்டு வகைகள் : எளிய பரவல் மற்றும் எளிதாக்கப்பட்ட பரவல் (The two types in diffusion arw simple diffusion and facilitated diffusion)

எளிய பரவல்

ஒரு சில மூலக்கூறுகள், துருவத்தன்மை அற்றவை. துருவத்தன்மை உடைய மூலக்கூறுகள், ஒரு பக்கத்தில், எதிர்மின்சுமை உடையதாகவும், பிரிதொரு பக்கத்தில், நேர்மின்சுமை உடையதாகவும் இருப்பவை. எளிய பரவலில், துருவத்தன்மை இல்லாத மூலக்கூறுகள், நேரடியாக லிபிட் அடுக்கின் ஊடே, அடர்த்திமிகு பகுதியிலிருந்து அடர்த்தி குறைந்த பகுதிக்கு அணிவகுத்து பரவுகின்றன. (In simple diffusion, small, nonpolar molecules (such as oxygen and carbon dioxide) move directly through the lipid bilayer of the cell membrane from areas of higher concentration to areas of lower concentration.) 

எளிதாக்கப்பட்ட பரவல்

இந்த பரவலில் துருவத்தன்மை உடைய உருப்பெருத்த மூலக்கூறுகள், செல் அடுக்கில் காணப்படும் புரத வாய்க்கால்களின் வாயிலாகவோ, செல் அடுக்கினுள் விரைந்து செல்லும் புரத கடத்திகளின் வாயிலாகவோ எடுத்துசெல்லபலபடுகின்றன. (செல்களில் புரதம் எனும் பொருளை வைத்துதான் பெரும்பாலான கருவிகள் செய்யப்பட்டுள்ளன பாருங்கள்! உதாரணமாக, புரத எக்கிகள், புரத வாய்க்கால்கள், புரத கடத்திகள் முதலானவை. Facilitated diffusion involves the movement of larger or polar molecules (like glucose and ions) through protein channels or carrier proteins embedded in the cell membrane. These proteins assist in the movement of molecules down their concentration gradient.)

சவ்வூடு பரவல்

நீர் போன்ற கரைப்பான் மூலக்கூறுகள் ஒரு சவ்வின் ஊடாக கரைப்பான் அடர்த்தி குறைந்த பகுதியிலிருந்து, கரைப்பான் அடர்த்தி மிகுந்த பகுதியை நோக்கி செல்வதே சவ்வூடு பரவல்.(Osmosis is the passive movement of solvent molecules (usually water) through a selectively permeable membrane from an area of lower solute concentration to an area of higher solute concentration. This movement occurs to equalize the concentration of solute on both sides of the membrane.)

தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு

தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு என்பது கரையம் அல்லது கரைபொருளை உட்செல்ல விடாது, கரைப்பானை மட்டுமே தேர்ந்து உட்செல்ல விடும் ஒரு மென்சவ்வாகும். (Osmosis occurs through a selectively permeable membrane, which allows the passage of solvent molecules (typically water) but restricts the passage of solute molecules (e.g., ions or larger particles). The membrane can be a cell membrane or a synthetic membrane used in laboratory experiments.)

ஹைப்போடோனிக் கரைசல்

ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதனுள் ஒரு பை பொட்டலத்தை இறக்குவோம். அந்த பொட்டலத்தில் மண் இருக்கட்டும். பாத்திரத்திலும் சிறிது மண்ணை இடலாம். பொட்டலத்தில் அதிக மண் இருந்தால், கரைப்பானாகிய நீர், பொட்டலத்தினுள் நுழையும். கரைப்பானும் கரைபொருளும் சேர்ந்தது கரைசல். கரைபொருள் அடர்த்தி குறைவாகவுள்ள கரைசல், ஹைப்போட்டோனிக் கரைசல். (In a hypotonic solution, the solute concentration is lower outside the cell than inside. Water moves into the cell, causing it to swell and potentially burst (lyse) if not regulated.)

ஹைப்பர்டோனிக் கரைசல்

பொட்டலத்தைவிட, நீரினுள் அதிக மண் இருந்தால், பொட்டலத்தில் நீர் இருக்கும் பட்சத்தில், அது அதைவிடுத்து வெளியேயுள்ள மண்ணைநோக்கி பாயும். கரைபொருள் அடர்த்தி அதிகமாகவுள்ள கரைசல், ஹைப்பர்டோனிக் கரைசல். (In a hypertonic solution, the solute concentration is higher outside the cell than inside. Water moves out of the cell, causing it to shrink and shrivel (crenate).)

ஐசோடோனிக் கரைசல்

பொட்டலத்துக்கு உள்ளும் வெளியும் ஒரே அளவில் மண் இருந்தால், நீர் நகர்ச்சி ஏதும் இருக்காது. கரைபொருள் அடர்த்தி இவ்வாறு இருபுறமும் சமமெனில், அக்கரைசல் ஐசோடோனிக் கரைசல். (An isotonic solution refers to a solution that has the same concentration of solute particles as another solution or a cell. In the context of biology and cell biology, isotonic solutions play a crucial role in maintaining the proper functioning and shape of cells.)️ செயலற்ற போக்குவரத்து, சவ்வூடுபரவல் மூலமாகவும் நடைபெறுமாம். Osmosis is a specific form of passive transport that involves the movement of water molecules across a selectively permeable membrane. Water moves from an area of lower solute concentration to an area of higher solute concentration until equilibrium is reached. 

கருத்துகள்