முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

5. கோல்கை உறுப்புகள் (Golgi Apparatus)

செல்லினுள் இருக்கும் கோல்கை உறுப்புகள் உட்கருவிற்கு அருகே, ஒன்றன் மீது ஒன்று அடுக்கிவைக்கப்பட்ட நைந்துபோன பைகளை போன்று காணப்படும் செல் நுண்ணுறுப்புகள். அந்த நைந்துபோன பைக்கு சிஸ்டர்னே என பெயர். இதுபோன்ற சிஸ்டர்னே - பை அமைப்புகள் எண்டோபிளாச வலையிலும் காணப்படுகின்றன என அறிந்தோம். [The Golgi Apparatus consists of a series of flattened membrane-bound sacs called cisternae. These cisternae are stacked on top of each other, resembling a stack of pancakes. It is typically located near the nucleus and is a part of the endomembrane system of the cell.]
 
கோல்கை உறுப்புகளின் பணி
எண்டோபிளாச வலைப்பின்னலில் மிருதுவான ரகத்தில் கொழுப்பும், கடினமான ரகத்தில் புரதமும் உற்பத்தியாவதை அறிந்தோம். அந்த கொழுப்புகளையும் புரதங்களையும் அடுக்குதல் (Sorting) மற்றும் மாற்றம் செய்யுதல் (Modification) போன்றவை கோல்கை உறுப்புகளின் பணிகள். மேலும், கழிவுகளை தகர்த்தெறியும் லைசோசோம்களும் இங்கே பிறக்கின்றன. [One of its primary functions is to modify, sort, and package proteins and lipids that are synthesized in the endoplasmic reticulum (ER). This modification can include adding or removing specific chemical groups or tags.]
 
NEET : Which of the following statements about the Golgi Apparatus is correct?
A. It is involved in protein synthesis.
B. It is responsible for detoxifying the cell.
C. It modifies, sorts, and packages proteins and lipids.
D. It stores genetic information in the form of DNA.
Answer: C. It modifies, sorts, and packages proteins and lipids.
 
மாற்றம் (Modification)
கொழுப்பாகயிருந்தாலும் சரி! புரதமாகயிருந்தாலும் சரி! ஒரு பணியில் அமர்த்தப்படும்போது அதற்கான மாறுதல்கள் தேவை! உதாரணமாக, ஃபைப்ரினோஜன் (Fibrinogen) என்பது இரத்தத்தில் உள்ள புரதம். இது ஃபைப்ரினாக மாற்றம் அடைந்தால்தான், இரத்தம் உறைதலில் பயன்தரமுடியும். இந்த மாற்றத்திற்கு, கோல்கை உறுப்புகள் காரணகர்த்தாவாகின்றன. இவை சில நொதிகளின் (Enzymes) உதவியால் புரதம் அல்லது கொழுப்பின் வேதிய அமைப்பை மாற்றி, ஒட்டுமொத்தமாக புதிதொன்றாக மாற்றுகின்றன. மேலும் பொதுவாக, எல்லா புரதம் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகளோடு இவை எள்ளளவு சர்க்கரையை சேர்க்கும். இந்த நிகழ்வு, கிளைக்கோசிலேஷன் எனப்படும். இதுவும் மாற்றமே! [ஒருவர் இயந்திரவியல் பொறியாளராகவோ, கட்டட பொறியாளராகவோ, கணினி பொறியாளராகவோ அல்லது மின்னணு பொறியாளராகவோ புதிதாக ஒரு நிறுவனத்தில் சேர்ந்தால், அதற்கு ஏற்றவாறு அவர் மாற்றப்படவேண்டும். "ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது" என்பார்கள். என்னதான் புத்தக கல்வி, புத்தியில் புகுந்திருந்தாலும், பட்டறிவு எனும் புதுமாற்றம் ஒருவரை பளிச்சென்றாக்கும்! மாற்றம் என்பது தேவை! Fibrinogen is a soluble protein present in blood plasma. In its unmodified form, it's unable to participate in blood clotting effectively.]
 
NEET : During the modification of proteins in the Golgi Apparatus, what common post-translational modification often occurs?
A. Phosphorylation
B. Glycosylation
C. Deamination
D. DNA replication
Answer: B. Glycosylation
 
அடுக்குதல் (Sorting)
அடுக்குதல் என்பது இந்த புரதம்/கொழுப்பு இந்த இடத்திற்குதான் செல்லவேண்டும் என நிர்ணயித்தலே! இது மாற்றத்தை தொடர்ந்து நிகழும். ஃபைப்ரினோஜன், ஃபைப்ரினாக மாற்றப்பட்டால், கோல்கை உறுப்பு அது எங்கு செல்லவேண்டும் என நிர்ணயித்து, அங்கே (அடிபட்டு இரத்தம் வெளியேறும் பகுதி) அனுப்ப விழையும். [Sorting within the Golgi Apparatus refers to the process of determining where molecules should go next in the cell.]
கோல்கை உறுப்புகளின் இரண்டு முகங்கள்
முகங்கள் என்பவை, கோல்கை உறுப்பினுள் செல்லும் பாதையையும், அதைவிடுத்து வெளியேறும் பாதையையும் குறிக்கும். உள்ளே செல்லும் பாதை, Cis Face என்றும் வெளியே செல்லும் பாதை, Trans Face என்றும் அறியப்படும். Cis வழியே நாம் உள்ளே சென்றோம் என்றால் நம்மில் சில மாற்றங்களை செய்து, நம்மை மருத்துவராகவோ, பொறியாளராகவோ அடுக்கி, Trans வழியே வெளியே தள்ளிவிடும் கோல்கை உறுப்புகள்! மாற்றங்கண்டு அடுக்கப்பட்டு வெளியேறும் புரதம் அல்லது கொழுப்புகள், சிறு பொட்டலம்போல ஆக்கப்பட்டுதான் வெளியேறுமாம். அந்த பொட்டலங்களுக்கு Secretary Vesicles என பெயர். [The Golgi Apparatus has two distinct faces: the cis face (receiving side) and the trans face (shipping side). Molecules enter through the cis face and exit from the trans face after processing. Once molecules are properly processed and sorted within the Golgi, they are packaged into vesicles known as secretory vesicles. These vesicles can fuse with the cell membrane to release their contents outside the cell.]
 
NEET : What is the primary function of the trans face of the Golgi Apparatus?
A. Receiving molecules from the endoplasmic reticulum.
B. Sorting and directing molecules to their final destinations.
C. Adding sugar molecules to proteins.
D. Detoxifying the cell.
Answer: B. Sorting and directing molecules to their final destinations.

கருத்துகள்