முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

8. பெராக்ஸிசோம்கள் (Peroxisomes)

செல்லினுள் காணப்படும் பெராக்ஸிசோம்களின் பணி, கொழுப்பு மூலக்கூறுகளை உடைத்தல் மற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு முதலான தீங்கு விளைவிக்கும் பொருட்களை தகர்த்தல்*
[The primary function of peroxisomes in a cell is to break down fatty acids through beta-oxidation and to detoxify harmful substances, especially hydrogen peroxide (H2O2).] 

CATALASE

பெராக்ஸிசோமில் உள்ள கேட்டலேஸ் நொதி ஹைட்ரஜன் பெராக்ஸைடை உடைத்து நீர் மற்றும் ஆக்ஸிஜனாக மாற்றுகிறது. [The enzyme responsible for breaking down hydrogen peroxide in peroxisomes is called catalase.]

ABUNDANCE

கல்லீரல் மற்றும் சிறுநீரக செல்களில் பெராக்ஸிசோம்கள் அதிகமாக காணப்படுகின்றன. அங்கு நுழையும் நச்சு பொருட்களை வெற்று பொருட்களாக்குகின்றன.
[Peroxisomes are particularly abundant in liver and kidney cells due to their role in detoxification. They are also essential for the maintenance of lipid balance and cellular health.]

PLASMALOGENS

ஒவ்வொரு செல் நுண்ணுறுப்புகளும் பிளாஸ்மா எனும் புற அடுக்கு அல்லது படலத்தை கொண்டிருக்கும். அது, நீர்மத்தன்மையோடும், முழுமையாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு, செல் படலத்தை நீர்மத்தன்மையோடும் முழுமையாகவும் வைத்திருக்க உதவும் கொழுப்புதான் பிளாஸ்மோலஜன். இது, பெராக்ஸிசோம்களில்தான் உற்பத்தியாகும்.
[Plasmalogens are important lipid molecules synthesized in peroxisomes. They play a role in maintaining cell membrane integrity and fluidity.]

ATP PRODUCTION

பெராக்ஸிசோம்கள், பொதுவாக கொழுப்பை உடைப்பவை. அவ்வாறு கொழுப்பு மூலக்கூறுகள் உடைபடும்போது, ஆற்றல் ATP மூலக்கூறுகள் தோன்றும். மைட்டோகாண்ட்ரியாவின் அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவு ஆற்றல் மூலக்கூறுகள் தோன்றும்.

கருத்துகள்