முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

9. சென்ட்ரோசோம் (Centrosome)

செல் பிரிதலில் முக்கிய பங்காற்றும் செல் நுண்ணுறுப்புகள் சென்ட்ரோசோம்கள். [A centrosome is a vital cellular structure found in animal cells. It plays a crucial role in cell division, particularly in organizing the microtubules that make up the cell's cytoskeleton.]
 
CENTRIOLES
ஒவ்வொரு சென்ட்ரோசோமினுள்ளும் சென்ட்ரியோல்கள் எனும் இரு குழல் அமைப்புகள் காணப்படும். இந்த சென்ட்ரியோல்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக காணப்படும். [A centrosome consists of two centrioles, which are cylindrical structures made up of microtubules. These centrioles are positioned at right angles to each other within the centrosome.] 
 
CILIA - FLAGELLA CREATION
சிலியா மற்றும் ஃப்ளாஜெல்லா உருவாக்கத்தில் பங்குபெறும் செல் நுண்ணுறுப்புகள் சென்ட்ரோசோம்களின் சென்ட்ரியோல்கள். [In certain cells, centrosomes are associated with the formation of cilia and flagella, which are involved in cell motility and the movement of substances over the cell surface.]
 
சிலியா மற்றும் ஃப்ளாஜெல்லா என்பவை செல்லின்மேல் காணப்படும் மயிரிழை போன்ற அமைப்புகள். சிலியாவும் ஃப்ளாஜெல்லாவும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோன்றினாலும் அவற்றின் உயரம், எண்ணிக்கை மற்றும் செயல்பாட்டை வைத்து வகைபடுத்திவிடலாம். செல்லின் புறப்பரப்பில் காணப்படும் சிலியாக்கள், செல்லின் மீது ஏதாவது நுண்மூலக்கூறுகளோ, அயல் பொருட்களோ வந்து ஒட்டும்போது அவற்றை தூர தள்ளுகின்றன. இதயம் துடிப்பதுபோல இவை துடிக்கும் இயல்புடையவை. இந்த துடிப்பு, மாசுக்கள் அண்டும்போது, "தொடாதேள்" என்று விரட்டுவதற்காகத்தான்! ஃப்ளாஜெல்லா என்பது சிலியாவைவிட சற்று உயரம் அதிகமுடைய மயிரிழை அமைப்பு. இது ஒரு செல்லை உந்தி தள்ளும் இயல்புடையது. உதாரணமாக, மனிதனின் விந்தணு செல்களை அதில் அமையப்பெற்றிருக்கும் ஃப்ளாஜெல்லா அமைப்புகள்தான் அண்டக்கருவை நோக்கி உந்தித்தள்ளும். [Cilia are short, hair-like structures that protrude from the cell surface. They are typically present in large numbers on the cell's surface. Cilia are primarily involved in moving fluids or substances along the cell surface. They beat in coordinated, rhythmic motions, creating a sweeping or wavelike movement. This movement is important for processes like moving mucus out of the respiratory tract or propelling single-celled organisms through liquid environments. Cilia are commonly found in the respiratory tract, where they help remove dust and debris, as well as in the female reproductive tract to move eggs and in the fallopian tubes to move the fertilized egg toward the uterus. Flagella are longer and less numerous than cilia. Typically, cells have only one or a few flagella. They have a whip-like structure and extend from the cell surface. Flagella are primarily involved in cell propulsion. They move in a whip-like manner, generating a twisting motion that propels the cell forward. Flagella are found in some single-celled organisms, such as sperm cells, where they enable the sperm to swim. Flagella can be found in various organisms, including sperm cells, some algae, and certain bacteria. In the case of sperm, the flagellum helps the sperm cell swim toward the egg for fertilization.]
ஃப்ளாஜெல்லா அமைப்புகள் பெரும்பாலும் ஒரு செல் உயிர்களிடம் காணப்படுகின்றன. [Flagella are commonly found in single-celled organisms like sperm cells in animals and certain types of algae. They are crucial for the movement of these organisms, allowing them to swim and navigate through their environments.]

கருத்துகள்