முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

DNA பிரதியெடுத்தல்



நைட்ரஜன் காரங்களின் இணைவில் உள்ள குறிப்பிடுந்தன்மை
ஒரு நைட்ரஜன் காரமானது, குறிப்பிட்ட, அதற்கேற்ற பிரிதொரு நைட்ரஜன் காரத்துடன் மட்டுமே கைகோர்க்கும். இன்னார், இன்னார் வீட்லதான் பொண்ணு எடுக்கணுங்ற கதமாதிரி! அடினைன், தைமைனோடு மட்டுமும், குவானைன், சைட்டோசைனோடு மட்டுமுந்தான் கைகோர்க்கும்! இதற்கு, ஜோடியுறு விதிகள் (Pairing Rules) என பெயர். Specifically, a rung of DNA consists of a pair of nitrogenous bases, and these bases follow the base-pairing rules: Adenine (A) always pairs with Thymine (T) in DNA. Cytosine (C) always pairs with Guanine (G) in DNA.

நைட்ரஜன் காரங்களின் அமைவுமுறையின் முக்கியத்துவம்  : மல்லிப்பூவை திசைக்கொன்றென இரு திசையிலும் வைத்து, அதனையடுத்து கனகாம்பரத்தையும் திசைக்கொன்றென இரு திசையிலும் வைத்து கட்டப்படும் எளிய அழகிய மாலை போன்றது DNA! இங்கு மல்லி-கனகாம்பரத்திற்கு பதிலாக Adenine, Thymine, Guanine மற்றும் Cytosine. இவ்வாறு, இன்னார் இன்னாரோடுதான் கைகோர்ப்பார் என அமையும் இந்த அமைவுமுறைதான், மரபு பண்பின் நிரல் (Code)! இந்த நிரல் Execute ஆகுவதனால்தான் நம்மில் மரபுபண்புகள் வெளிப்படுகின்றன. The specific pattern of nitrogenous bases in DNA is essential because it serves as the code for genetic information, guides the synthesis of proteins, ensures replication accuracy, contributes to genetic diversity, and is the basis of inheritance in all living organisms.


DNA பிரதியெடுத்தல் (Replication) : ஒரு செல் பிரிவடைவதற்கு முன்னதாக அதனுள் இருக்கும் DNA-ஐ போலவே, மற்றொரு DNA-ஐ உருவாக்குவதுதான் DNA பிரதியெடுத்தல் ஆகும். DNA replication is the process by which a cell makes an identical copy of its DNA before cell division.

புதிதாக பிரதியான DNA : புதிதாக பிரதியான DNA, ஒரு கூடை Sunlight! ஒரு கூடை Moonlight!” என்பதுபோல, ஒரு Strand பெற்றோர் DNA-யுடையதாகவும், ஒரு Strand புதிதாக உருவானதாகவும் இருக்கும். இதற்கு, அரை பழைமை நிலை (Semi-Conservative Model) என பெயர். DNA Replication follows a semi-conservative model, meaning each newly formed DNA molecule contains one original strand (parental) and one newly synthesized strand (daughter).


DNA பிரதியாக்கத்தின் மூன்று படிகள் (Steps) : 

1. துவக்கம் (Initiation)

2. நீட்சி (Elongation)

3. முடித்தல் (Termination)

DNA பிரதியாக்க நிலைகள்
    துவக்கம் : திருக்கி கட்டப்பட்ட DNA, ஒரு புள்ளியில் அவிழும்.
    நீட்சி : அவிழ்ந்த பகுதியில் புதிய Strands உருவாகி நீட்டப்படும்.
    முடித்தல் : முழு DNA-யும் உருவாக்கப்படும்.

Initiation: DNA unwinds at the origin of replication, creating a replication bubble. Elongation: Enzymes called DNA polymerases add complementary nucleotides to the growing daughter strands. Termination: The process ends when the entire DNA molecule is copied.

கருத்துகள்