முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (202)


2011. மஞ்சள் நகரம்?
     ஈரோடு

2012. இயற்கை விரும்பிகளின் பூமி?
     தேனி

2013. முதன்முதலில் குடையை பயன்படுத்தியவர்கள்?
     சீனர்கள்

2014. உலகின் முதல் ஊர் என கருதப்படுவது?
     உர் (ஈராக்)  (தமிழில் ஊர் என்பதை உர் என்கிறார்கள்....)

2015. உலகளவில் விண்வெளி ஆய்வின் அடிப்படையில் இந்தியா எத்தனையாவது இடம்?
     ஆறு

2016. "நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா....?" - யார் இந்த அப்பாட்டக்கர்?
     சினிமா வசனங்களிலும் பாடல்களிலும் மிக பிரபலமானது இந்த அப்பாட்டக்கர் என்ற வார்த்தை. அமிர்தலல் விதல்தாஸ் தக்கர் (Amritlal Vithaldas Thakkar) என்பவர் மிக பெரிய சமூக சீர்திருத்தவாதி. குஜராத்தில் பிறந்த இவர் ஹரிஜன மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர்.  சுதந்திரத்திற்கு முன்னால் மெட்ராஸ் மாகாணத்திலும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். இவரை மெட்ராஸ் மக்கள் பாசமாக தக்கர் பாபா என்று அழைத்தனர் (குஜராத்தியில் பாபா என்றால் அப்பா என்று பொருள்). தக்கர் பாபா பெரிய அறிவாளி, பல துறைகளில் சிறந்து விளங்கியவர். அவரிடம் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் சொல்வார். நாளடைவில் மெட்ராஸ் மக்கள் யாரையும் பெரிய அறிவாளியா என்று கேலியாக குறிப்பிட  பெரிய அப்பா தக்கரா ? என்று கேட்க தொடங்கினர். பின்னாளில் அப்பா தக்கர் என்ற வார்த்தை மருவி அப்பாடக்கர் ஆகிவிட்டது. இதில் வியப்பென்னவெனில்,  வேர்ச்சொல் தேடி ஐயம் திறிவற பொருந்தும் ஒரு வார்த்தையையும் நம்மவர்கள் கண்டுப்பிடித்துவிட்டனர்... ஆர்ப்பட்டக்காரர் என்ற சொல்தான் அப்பாட்டக்கரானதாம்... (தக்கர் பாபா பெயரில் தக்கர் பாபா வித்யாலையா என்றொரு பள்ளி தி. நகரில் இன்றும் செயல்படுகிறது. தக்கர் பாபாவை கவுரவிக்க இந்திய அரசாங்கம் 1969 ஆம் ஆண்டு ஒரு தபால் தலையை வெளியிட்டது.)

2017. எதனால் ஒரு பெண் , சராசரி ஆண் உண்பதை காட்டிலும் குறைவான அளவு உண்ண வேண்டும்?
     பொதுவாக மனிதர்கள் தினந்தோறும் குறிப்பிட்ட நேர அளவு,  நடந்தோ ஓடியோ உடலிலுள்ள கலோரியளவை எரிக்கவேண்டும். கலோரி சேர்க்கை இதயம்சார் இடர்களை உண்டுபண்ணும். உண்ணும் உணவு கலோரியளவை தீர்மானிக்கிறது. ஆண்களின் உடலில் கலோரியை எரிக்கும் திறம், பெண்களை காட்டிலும் சற்று அதிகம். எனவே , பெண்கள் குறைவாகவுண்பதே நிறைவான இன்பம். ஆனால் , தற்காலத்தில் சரிவிகித உணவு பட்டியலில் அடங்காத துரித உணவுகள் எனப்படும் மரணத்தை துரிதப்படுத்தும் உணவுகளை பெண்டிர் விரும்பி உண்கிறார்கள். இதற்கு ஆங்கிலத்தில் Foodie என்ற கலைச்சொல் (Terminology) வேறு வழங்கலாயிற்று... தொடர்ந்து கண்டுணர்ந்துகொண்டிருக்கும் வளர் அறிவியல், பெண்களின் உணவு அளவை குறைக்க வலியுறுத்துகிறது. அறிவியல் காணும் முன்னரே இதை ஒருவர் நமக்கு சொல்லிவிட்டார். நம் மீது அக்கறை எடுத்து அன்றே நம் பாட்டி சொல்லியாயிற்று. "உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு - குறைத்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்" என அன்றே ஔவையார் கூறியாயிற்று.

2018. மத்திய அரசின் வீடு இல்லாதவர்களுக்கு வீடு தரும் திட்டத்தின் பெயர்?
     பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
(பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறத் திட்டம், 25 ஜூன் , 2015 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திரா ஆவாஸ் யோஜனா ( இந்திராவின் வீட்டுத் திட்டம்) என்பது இதன் முந்தைய வடிவம். (Previous Version). ஆவாஸ் என்றால் வீடு என பொருள். (நமக்கு ஆவாஸ் அஞ்சிங் தான் தெரியும்))


2019. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"  என பாடியவர்?
     பாரதிதாசனார்
(தமிழருக்கு ஏதேனும் இன்னலெனில் சங்காரம் (அழிவு) நிச்சயம்! வெறும் வரிகளல்ல... பாரதிதாசனாரின் சத்தியவாக்கு என கடந்த சில நாட்களாக கண்டுணர்ந்துகொண்டிருக்கிறோம்.)


2020. உடுக்கள் என்பதன் பொருள்?
     விண்மீன்கள்

கருத்துகள்