முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (203)


2021. குயில்பாட்டு இயற்றியவர்?

     பாரதியார்

2022. தமிழகத்தின் ஜெயங்கொண்டான் என்ற பகுதி எந்த தாதுவிற்கு புகழ்பெற்றது?
     லிக்னைட்

2023. மெட்ராஸ் மாநிலம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட வருடம்?
     1969

2024. மெட்ராஸ் தமிழ்நாடாக பெயர்மாற்றம் செய்யப்பட்டப் பின், முதல் முதலமைச்சர்?
     அண்ணாத்துரை

2025. மெட்ராஸ் , சென்னையாக பெயர்மாற்றம் செய்யப்பட்டது?
     1995

2026. எந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் புகையிலை (Tobacco) கொணரப்பட்டது?
     போர்ச்சுகீசிய நாடு [சிகரெட் முதலான வஸ்துகளிலெல்லாம் இந்த புகையிலைதான் நிரப்பப்பட்டுள்ளது.]

2027. எந்த நாட்டில் முதன்முதலில் புகையிலை பயன்பாடு ஆரம்பித்தது?
     அமெரிக்கா

2028. புகையிலையில் உள்ள வேதிப்பொருள்?
     நிக்கோட்டின்

2029. நிக்கோட்டின் பொதுவாக எந்த விதத்தில் பயன்படுத்தப்படுகிறது?
     பூச்சிக்கொல்லியாக (Insecticide)
[பூச்சிக்கொல்லியாக பயன்படும் நிக்கோட்டின் அடங்கிய புகையிலையை மனிதர்கள் தீண்டுவது மிக அபாயம். நிக்கோட்டின் அடங்கிய புகையை உள்வாங்கி ஊதாமல் , வெறும் நிக்கோட்டினை தனியே உட்கொண்டால் உடனடியாய் மரணம் ஏற்படுமாம்.]


2030. புகையிலை உபயோகம் அதிகமாயுள்ள இந்திய நகரம்?
     கொல்கத்தா

கருத்துகள்