முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (204)

 

2031. சிகரெட் பிடிப்பவரின் மூளையை எத்தனை நொடிகளில் நிக்கோட்டின் அடைகிறது?
     8 நொடிகள்
[மூளையின் செயல்படும் திறத்தையை மாற்றிவிடும் (Alters the Nerve Signaling Pattern of Brain) தன்மை நிக்கோட்டினுக்கு உண்டு. இதனாலேயே பலரால் சிகரெட் பழக்கத்தை விட்டொழிக்கமுடியவில்லை. திரிபுரா மாநிலத்தில் அதிகபடியான புகையிலை வசப்பட்டோர் உள்ளனர்.]


2032. பீடி சுற்றுகையில் புகையிலை தூளை எந்த தாவரத்தின் இலையில் சுருட்டுகிறார்கள்?
     டிஸ்பைரோஸ் (Dispyros)

2033. நிக்கோட்டினிலுள்ள எந்த பொருள் உடலில் ஆக்சிஜன் ஓட்டத்தை தடுக்கிறது?
     கார்பன் மோனாக்ஸைடு
[ஆக்சிஜன் ஓட்டம் மட்டுமல்ல! எலும்பு வலுவாகவிருக்க வகைசெய்யும் வைட்டமின் Cயின் அளவையும் சிகரெட் குறைக்கிறது! C for Cigarette and Cigarette for C Vitamin Depletion. இதில் வியப்பென்னவெனில் இந்த நிக்கோட்டின் பொருள் கத்தரிக்காய் குடும்பமாகிய சொலனேசியை (Solanaceae) சார்ந்ததுதான்! தக்காளி , கத்தரி , சுண்டைக்காய் , உருளைக்கிழங்கு என நீளும் கண்ணியமிக்க இந்த சொலனேசி குடும்பத்தில் நிக்கோட்டின் என்ற அசுரன் ! ஆனால் , எதுவும் காரணமில்லாமல் இல்லை! அசுரனாயினும் அசிட்டில்காலின் (Acetylcholine) என்ற போதைபொருளை நிக்கோட்டின் கொண்டிருப்பதனால் ஊக்க மருந்தாகவும் (Stimulant) பயன்படுகிறது.]


2034. மின்-சிகரெட் (E - Cigarette) எனப்படுவது?
     நிக்கோட்டின் திரவத்தை மின்கலம் (Battery) மூலமாக சூடேற்றி அதிலிருந்து வரும் வாயுவை உள்ளிழுக்கச்செய்யும் வேலைபாடு! புகை ஏதும் வராதாம்! அப்படியே புகையிலையுள்ள சிகரெட் புகைத்த அனுபவம் தருமாம் !
[ஹீக்கா என்பதும் புகை ஏதும் வாராமால் புகைக்கும் அனுபவம் தரும் போதை வஸ்துதான்.]


2035. புகையிலை எதிர்ப்பு தினம் (No Tobacco Day)?
     மே 31 [புகையிலை பழக்கத்தை விடுவது சிரமமானதாகயிருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. மேலும் புகைப்பிடித்தல் எதிர்ப்பு தினம் (No Smoking Day) மார்ச் மாதம் இரண்டாம் புதனிலாம்‌.]

2036. உலகத்தை குழந்தையின் கண்கொண்டு பாருங்கள் என்றவர்?
     கைலாஷ் சத்யார்த்தி

2037. இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் தந்தை?
     விக்ரம் சாராபாய்

2038. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது?
     திருவனந்தபுரம்

2039. எந்த செயற்கை கோள்  ஏவுதலுக்கு விக்ரம் சாராபாய் காரணமாகயிருந்தார்?
     ஆர்யபட்டா

2040. பசுபிக் பெருங்கடலுக்கு அப்பெயரை சூட்டியவர்?
     பெர்டினாண்டு மெக்னல்லன்

கருத்துகள்