முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (205)

 

2041. புளித்த பாலில் உள்ள அமிலம்?
     லாக்டிக் அமிலம்

2042. கெட்டுப்போன வெண்ணெயில் உள்ள அமிலம்?
     பியூட்ரிக் அமிலம்

2043. கொழுப்புகளில் உள்ள அமிலம்?
     ஸ்டியரிக் அமிலம்

2044. கத்தரிக்காயில் உள்ள அமிலம்?
     அஸ்கார்பிக் அமிலம்

2045. அமிலம் என்ன சுவையுடையது?
     புளிப்பு சுவை [வலிமை குன்றிய அமிலங்கள் மட்டுமே ருசிபார்க்கப்படுகின்றன.]

2046. பாலை பாதுகாக்க பயன்படும் கரைசல்?
     ஃபார்மால்டிஹைடு கரைசல்

2047. புகையிலை உலராமல் தடுக்க பயன்படுவது?
     கிளிசரால் [தானாக கண்ணீர் வரவைப்பதில் கிளிசரின் என்ற‌ மற்றொரு பொருள் பயன்படுகிறது‌. சிலருக்கு கிளிசரின் போடாமலே கண்ணீர் வருகிறது‌. ஆனால், கிளிசரின் பார்த்த வேலையால் தான் !  கிளிசரின் போட்டுக்கொண்டு ஏங்கி ஏங்கி அழும் தொலைக்காட்சி தொடர் நடிகைகள் , அநேக இல்லத்தரசிகளை அழவிடுகிறார்கள்! வெங்காயம் வெட்டி வெட்டி இல்லத்தரசர்களும் அழுகிறார்கள்! எல்லாம் கிளிசரினால் தான்!]

2048. ஊறுகாய் கெடாமலிருக்க பயன்படுவது?
     சோடியம் பென்சோயேட்

2049. உறுப்பு மயக்கமூட்டியாக பயன்படுவது?
     பென்சைல் ஆல்கஹால் [அறுவை சிகிச்சையின் போது வலிமறத்துப்போகச்செய்யும் பொருளாக பயன்படுகிறது.]

2050. அறிவு மிகுந்த பூச்சி எனப்படுவது?
     எறும்பு

கருத்துகள்