முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (206)


2051. மனிதன் நடந்துகொள்வதுபோலவே செயலுறும் இயந்திரங்களை உருவாக்கும் நுட்பம்?
     செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)

2052. செயற்கை நுண்ணறிவியலின் தந்தை?
     ஜான் மெக்கார்த்தி (John McCarthy)

2053. செயற்கை நுண்ணறிவின்படி உருவாக்கப்பட்ட முதல் நாய் ரோபோவின் பெயர்?
     பிக் டாக்

2054. எந்த ஒரு தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம்?
     ஹீலியம்

2055. இரும்பை போலவே காந்தசக்தியுடைய உலோகம்?
     நிக்கல்

2056. பச்சை மலை எனப்படுவது?
     கோத்தகிரி

2057. பொருளியல் (Economics) பாடத்தின் கிளைகள்?
     நுண்ணியல் மற்றும் பேரியல்

2058. உலகின் பெரும் மருந்தகம் எனப்படுவது?
     வெப்பமண்டலக்காடுகள்

2059. சுங்கம் தவிர்த்த சோழன் எனப்படுபவர்?
     முதலாம் குலோத்துங்கசோழன்

2060. நீண்டநேரம் ஈரப்பதத்தை தக்கவைக்கும் மண்?
     கரிசல் மண்

கருத்துகள்