முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (207)


2061. மனித கண்ணினுள் மூன்றில் இருபங்கு நிரம்பியுள்ள திரவம்?
     விட்ரியஸ் திரவம்

2062. கண்ணின் நிறம் நீலமாக இருந்தால் கண்ணின் எந்த பகுதி நீலமாகயிருக்கும்?
     ஐரிஸ் [கண்ணின் நிறம் என்பது ஐரிஸின் நிறம்தான்...]

2063. சாதாரண நீரின் வேதி வாய்பாடு H2O. கன நீரின் (Heavy Water) வேதி வாய்பாடு?
     D2O

2064. சோளம் என்பது அத்தாவரத்தின் எப்பகுதி?
     விதை

2065. தாவரங்களில் உள்ள செல்கள் எவ்வகையவை?
     யூகேரியாட்டிக் வகை

2066. கலாச்சாரத்தின் தலைநகரம் எனப்படும் மாவட்டம்?
     தஞ்சை

2067. டைட்டானிக் கப்பல் எந்த ஆண்டு மூழ்கியது?
     1912

2068. இந்தியாவில் தேர்தல் மை தயாரிக்கப்படும் ஒரே இடம்?
     மைசூர்  [மை தயாரிக்கப்படும் இடம் மைசூர்...]

2069. இந்தியாவில் காப்பி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
     கர்நாடகா  [இரண்டாவது தமிழகம்]

2070. மயில்கள் சரணாலயம் தமிழகத்தில் எங்குள்ளது?
     விராலிமலை

கருத்துகள்