முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (208)

 2071. மாநில அரசின் தலைவர்?

     ஆளுநர்

2072. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி?
     ஹரிலால் ஜே கனியா

2073. எந்த நாட்டிலிருந்து அடிப்படை உரிமைகள் பெறப்பட்டன?
    அமெரிக்கா   

2074. சட்டத்தின் முன் யாவரும் சமம் எனும் அரசியல் பிரிவு?
     பிரிவு14 (Article 14) (தீண்டாமை ஒழிப்பு குறித்த அரசியல் பிரிவு : பிரிவு 17)

2075. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர்?
     பாத்திமா பீவி (இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் : சரோஜினி நாயுடு)
 

2076. சுவாசத்திற்கு உதவும் மூளையின் பகுதி?
     முகுளம்

2077. நினைவாற்றலுக்கு உதவும் மூளையின் பகுதி?
     பெருமூளை

2078. இந்தியாவில் வைர சுரங்கங்கள் வெகுவாகவுள்ள இடம்?
    பன்னா
(குளத்தில் வளரும் Tilapia எனப்படும் ஒரு வகை மீனையும் நம் ஊரில் பன்னா என்றழைக்கும் வழமையுண்டு‌. இந்த மீன் தனது குஞ்சுகளை தனது வாயினுள் வைத்து பாதுகாப்பதை இளம்பிராயத்திலேயே அதிகமுறை கண்டுள்ளேன்.‌)


2079. வௌவால்கள் விலங்கியலில் எந்த வகுப்பிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளன?
     சிராப்டீரா (Chiroptera)
(கையில் சிறகுடையவை (கைச்சிறகிகள்) என பொருள்படும் வகையில் சிராப்டீரா என வகைப்படுத்தியுள்ளனர்.)


2080. வௌவால்களின் வகைகள்?
     குறும் கைச்சிறகிகள் மற்றும் பெரும் கைச்சிறகிகள் (Microchiroptera&Macrochiroptera) (சில வௌவால்கள் நரியின் முகத்தை கொண்டிருப்பவை‌. எனவே இவை , பறக்கும் நரிகள் (Flying Fox) என அழைக்கப்படுகின்றன‌. சில வௌவால்கள் பழங்களை மட்டுமே உண்ணும் சைவப்பிள்ளைகளாக உள்ளன. இவை , பழந்தீனி வௌவால்கள். இன்னும் சில, சிறு சிறு பூச்சிகளை உண்பவை. அமெரிக்காவில் உள்ள ஒரு வகை, இரத்தம் உறிஞ்சும் தன்மையுடையது. கால்நடைகள் மற்றும் மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சி பருகி உயிர்வாழ்பவை. இதனாலேயே , வேம்பயர் (Vampire) எனப்படும் இரத்தக் காட்டேறி கதைகளில் வௌவால்கள் பொதுசனங்களாகின. பேய் கதை புனைவதற்கேற்ப வௌவால்கள் இரவில் மட்டுமே வெளியே வருகின்றன. இது கதை பின்னுபவர்களுக்கு இன்னும் சாதமாகிபோனது. பாவம்! இரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சிக்கும் கொசுவிற்கும் இன்னும் பேய்கதைகள் புனையப்படவில்லை! பூமியில் மனிதன் வாழ எந்த அளவிற்கு உரிமை உள்ளதோ அந்த அளவிற்கு பிற உயிர்களுக்கும் உரிமையுண்டு. எவையும் எவ்விதத்தாலும் தீயவையோ தாழ்த்தப்பட்டவையோ அல்ல ! உயிர் வாழ ஒவ்வோர் உயிரும் ஒவ்வொரு விதத்திலும் வித்தியாசமாய் பரிணமித்துள்ளன. தன்னை காப்பதற்காக விடத்தைக் கொண்டுள்ளன. கூரிய பற்களை கொண்டுள்ளன. அசாம்பாவிதம் புரியும் யோசிக்க தெரிந்த மனிதனை விடவா இந்த அப்பாவி உயிர்கள் தீயவை?
 

கருத்துகள்